மலிங்காவை இந்த ஆல்ரவுண்டர் காப்பி அடிக்கிறார் ; அடித்து கூறும் முன்னாள் வீரர் !!

இலங்கை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹசரங்காவின் செயல்பாடு இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மலிங்காவை போல் இருக்கிறது என்று மஹெளா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

 

சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹசரங்கா இலங்கை அணிக்காக மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்படும் திறமை படைத்தவர்.

கடந்த 2021 உலக கோப்பை தொடரில் 16 விக்கெட்களை வீழ்த்தி உலக கிரிக்கெட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்திய ஹசரங்கா, நடந்து முடிந்த ஆசிய கோப்பையிலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கும் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார்.

 

ஹசரங்காவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வேளையில், அவருடைய திறமை மற்றும் அவர் கடந்துவந்த பாதை குறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் மஹெளா ஜெயவர்த்தனே செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மஹெளா ஜெயவர்த்தனே தெரிவித்ததாவது,“கடந்த 12 மாதங்களில் ஹசரங்கா மிகவும் அனுபவ சாலியாக உருவெடுத்துள்ளார். கடுமையான மைதானத்தில், பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிகளும் சிறப்பாக செயல்படுகிறார். இவருடைய ஆட்டம் மிகவும் சிறப்பாக உள்ளது. அணியின் கேப்டனாகவோ அல்லது துணை கேப்டனாகவோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பிலோ இல்லாமலிருந்தாலும், ஹசரங்கா தலைமைத்துவம் பொருந்தியவராகவே உள்ளார். இளம் வீரர்கள் இவரை ஒரு லீடராகவே கருதுகின்றனர். நேர்மையாக சொல்லப்போனால் ஹசரங்காவின் சகோதரர் (சதுரங்கா டீ சில்வா) எங்களுடன் சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஹசரங்கா 19 வயதிற்குட்பட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். நாங்கள் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தபோது ஹசரங்கா முதல் தர போட்டிகளில் பங்கேற்று விளையாட துவங்கினார். நாங்கள் அனைவரும் ஹசரங்கா ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக வரவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அப்பொழுது ஹசரங்கா திறமையான பந்து வீச்சாளராக உருவெடுப்பார் என்பது எங்களுக்கு தெரியாமல் இருந்தது. அதாவது ஆரம்ப கட்டத்தில் ஹசரங்காவிற்கு துல்லியமாக பந்து வீசு வராது, ஆனால் ஏதாவது வித்தியாசமாக அவர் செய்து கொண்டுதான் இருப்பார்.

மேலும் ஹசரங்காவின் வளர்ச்சி இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் மலிங்காவை போன்று உள்ளது, மலிங்காவும் ஹசரங்காவும் ஒரே பகுதியிலிருந்து வந்தவர்கள், இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான உடல் மொழி(mannerisms) உள்ளது, ஆரம்ப கட்டத்தில் இந்த இரண்டு வீரர்களும் யாருக்கும் தெரியாமல் அமைதியாக ட்ரெஸ்ஸிங் ரூமில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தனர், மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது வித்தியாசமான ஹேர் ஸ்டைல் மற்றும் டாட்டு போடுவது என இருவரும் ஒரே மாதிரியாக உள்ளனர்.ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் மலிங்காவை போன்று ஹசரங்கா உருவெடுத்து வருகிறார்” என்று மஹெளா ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.