டி.20 உலகக்கோப்பையில் நடராஜனுக்கு இடம் கொடுக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

நடராஜனை மீண்டும் இந்திய அணியில் விளையாட வைக்க வேண்டும் என்று டேனிஷ் கனரியா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பை தொடர் நெருங்க நெருங்க உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்பும் ஒவ்வொரு அணியிலும் அரங்கேறிக் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு அணியும், பல்வேறு விதமான தொடர்களில் தங்களது வீரர்களை ஈடுபடுத்தி சிறப்பாக செயல்படும் வீரர்களை கவனித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற அணிகளில் திறமையான வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எந்த வீரரை அணியில் இணைத்துக் கொள்ளலாம் எந்த வீரரை நீக்கலாம் என்று அணித் தேர்வாளர்கள் பெருத்த சந்தேகத்தில் தவித்து வருகின்றனர்.

 

அவர்கள் தெளிவாக யோசித்து அணியை தேர்ந்தெடுக்கும் வகையில் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய உயர்வான ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கிட்டத்தட்ட அணியை தேர்ந்தெடுத்துவிட்ட இந்திய அணி பந்து வீச்சாளராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்து வருகிறது,சிராஜ்,அர்ஷ்திப், உம்ரான் மாலிக் ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் யாரை சேர்க்கலாம் யாரை அணியிலிருந்து நீக்கலாம் என்ற பெரும் குழப்பத்தில் தவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு அறிவுரை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா, அர்ஷ்திப் சிங் மற்றும் நடராஜன் ஆகிய இரண்டு பந்து வீச்சாளர்களும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரும் உதவியாக இருப்பார்கள் என்று செய்தியாளர் சந்த்திப் பேசியுள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனரியா பேசுகையில்,“என்னுடைய வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், அர்ஷ்திப் சிங் விண்டீஸ் அணிக்கு எதிரான தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.நிச்சயம் புத்திசாலித்தனமான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்.நிச்சயம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்திப் சிங் டி20 உலகக் கோப்பை தொடர் மற்றும் துபாயில் நடைபெறும் ஆசியக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு வெற்றிகர வீரராக இருப்பார் என்று டேனிஷ் கனரியா பேசியிருந்தார்.

மேலும் நடராஜன் குறித்து பேசிய டேனிஷ் கனரியா,நடராஜன் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க வேண்டும்,அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அவர் ஒரு சிறந்த வீரர் ஆனால் இந்திய அணியில் பல பந்து வீச்சாளர்கள் உள்ளனர் அணி நிர்வாகம் அதையெல்லாம் கவனத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என்று டேனிஷ் கனரியா பேசியிருந்தது குறிப்டதக்கது.

 

Mohamed:

This website uses cookies.