போறபோக்க பாத்தா.. சமியை ஓரம்கட்டிட்டு இவரு உலகக்கோப்பை டீம்ல வந்துருவார் பாருங்க – அடித்து சொல்லும் முன்னாள் வீரர்!

முகமது சமியை ஓரம்கட்டிவிட்டு இவர் டி20 உலக கோப்பை அணியில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அக்டோபர் 16ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடர் துவங்குகிறது. இந்திய அணிக்கு  மிகப்பெரிய பின்னடைவை தரும் விதமாக பும்ரா காயத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் ஆகியும் இன்னும் பும்ராவிற்கு மாற்று வீரர் யார்? என்று இந்திய அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருக்கின்றன.

 

இந்நிலையில் இந்திய அணியின் ரிசர்வ் வரிசையில் முகமது சமி, தீபக் சஹர் ஆகிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இருவரில் ஒருவர் பும்ராவிற்கு மாற்றாக உள்ளே எடுத்து வரப்படலாம் என கருத்துக்கள் நிலவி வந்தது. ஆனால் முகமது சமி கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருப்பதால் உடல் தகுதியை நிரூபிப்பதற்கு காலதாமதம் ஆகிறது. அதே நேரம் தீபக் சகர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பு கணுக்கால் பிசகியதால் விளையாட முடியாமல் வெளியேறினார்.

தற்போது இருவரும் சிக்கலில் இருப்பதால் தென் ஆப்பிரிக்கா தொடரில் அபாரமாக விளையாடி வரும் முகமது சிராஜ் உலகக்கோப்பை டி20 அணியில் பும்ராவிற்கு மாற்றாக எடுக்கப்படலாம் என்று மற்றொரு கருத்துக்களும் நிலவி வருகின்றன. அதற்கு ஏற்றவாறு முகமது சிராஜிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர். அவர் தனது ட்விட்டர் பதிவில்,

“முகமது சிராஜ், சமியை ஓரம் கட்டிவிட்டு டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பதற்கு தயாராகி வருகிறார்.” என பதிவிட்டு இருந்தார்.

தற்போது நடைபெற்று முடிந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார். இதுவும் தேர்வு குழுவினரின் கவனத்திற்கு செல்லும்.

ஏற்கனவே இந்திய அணி ஒரு பயிற்சி ஆட்டத்தை முடித்து விட்டது. இன்னும் ஒரே ஒரு பயிற்சி ஆட்டம் மட்டுமே இருக்கிறது. அதன் பிறகு 23ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியை விளையாடுகிறது. 10 நாட்களுக்கும் குறைவாக இருப்பதால் புதிதாக அறிவிக்கப்படும் வீரருக்கு ஆஸ்திரேலியா மைதானத்தில் பயிற்சி செய்ய போதிய அவகாசமும் தேவை. இதனை கருத்தில் கொண்டு இன்னும் ஒரு சில தினங்களில் மாற்று வீரர் அறிவிக்கப்படலாம்.” என்றும் தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.