பாகிஸ்தான் அணியை பழி தீர்க்குமா இந்திய அணி; 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு; இந்தியா பாகிஸ்தான் எப்பொழுது தெரியுமா !!

2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் குரூப்-2 இல் இடம்பெற்றுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய நாட்டில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது.

இதில் குரூப் 2 வில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது, மேலும் இதனைஅடுத்து தகுதி சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் குரூப்-2 வில் இணையும்,இதில் இந்திய அணி அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனான தனது முதல் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளது.

ஐசிசியால் நடத்தப்படும் போட்டியில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகளும் மோதிக் கொள்வதால் உலக கிரிக்கெட் வட்டாரத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்பொழுதுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும்.

அண்டை நாடுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இருந்தாலும் அரசியல் பிரச்சனையின் காரணமாக இரண்டு அணிகளுக்கும் எப்பொழுதும் மோதல் போக்காவே இருக்கும், இதனால் இரண்டு நாடுகளுக்கு மத்தியில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் நடைபெறும் போட்டி இரண்டு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகளுடன் பரிதாப தோல்வியை தழுவி அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கூட பெறமால்vவெளியேறியது, இதனால் வருகிற இந்த உலகக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்திய அணிக்கான லிமிடெட் ஓவர் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்றும் ஒரு சில கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதே போன்று நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணி அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் 22ஆம் தேதி தனது முதல் போட்டியை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.