எழுதி வச்சுக்கங்க… இந்த இரண்டு டீம்ல ஒரு டீம் தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும்; சேன் வாட்சன் கணிப்பு !!

எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் எது என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான சேன் வாட்சன் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க உள்ளது. அக்டோபர் 16ம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது அனைத்து அணிகளின் கனவாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு அணியும் டி.20 உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும், டி.20 உலகக்கோப்பை தொடருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களை போலவே டி.20 உலகக்கோப்பை தொடருக்காக காத்திருக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர், இந்த தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணிக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் முன்னாள் வீரர்கள் பலர் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான சேன் வாட்சன், சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகள் எது என்பது குறித்தான தனது கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சேன் வாட்சன் பேசுகையில், “ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி டி.20 தொடரையும் வென்றதால், டி.20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியே முதன்மையானது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணிக்கு எதிரான டி.20 தொடரை இழந்திருந்தாலும், ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக டி.20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அசுர பலம் கொண்ட அணியாகவே திகழ்ந்து வருகிறது. டி.20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதும், ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் சாதகமான விசயம், ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் மற்ற ஆடுகளங்களை விட முற்றிலும் மாறுபட்டவை, ஆடுகளங்களத்தின் தன்மையை புரிந்து கொள்வதே பல அணிகளுக்கு கடினமான விசயமாக இருக்கும், எனவே என்னை பொறுத்தவரையில் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளில் ஒன்று தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.