உலககோப்பைக்கு பின் வீரர்களின் தரவரிசை பட்டியல்!! கோலியின் முதலிடம் காலி?

உலககோப்பைக்கு பிறகு, ஒருநாள் போட்டிக்கான வீரர்கள், அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அணிகளின் தரவரிசை பட்டியல்

உலகக்கோப்பை தொடர் முடிவு பெற்ற பிறகு, ஐசிசி நிர்வாகம் அணிகளுக்கான புள்ளிபட்டியல் மற்றும் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன.

தரவரிசை அணி போட்டிகள் புள்ளிகள் மதிப்பீடு
1 இங்கிலாந்து 52 6,420 123
2 இந்தியா 55 6.745 123
3 நியூசிலாந்து 41 4.590 112
4 ஆஸ்திரேலியா 49 5.470 112
5 தென்னாப்பிரிக்கா 47 5.193 110
6 பாக்கிஸ்தான் 49 4.756 97
7 வங்காளம் 43 3.873 90
8 இலங்கை 51 4.009 79
9 மேற்கிந்திய தீவுகள் 47 3.606 77
10 ஆப்கானிஸ்தான் 40 2,359 59

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்

பேட்டிங் தரவரிசையில் 886 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் வகிக்கிறார். இரண்டாம் இடத்தில 881 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா உள்ளார். பாபர் அசாம் மற்றும் டு ப்ளசிஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

 

தரவரிசை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 விராட் கோலி இந்தியா 891
2 ரோஹித் சர்மா இந்தியா 885
3 பாபர் ஆசாம் பாக்கிஸ்தான் 827
4 ஃபிராங்கோயிஸ் டு பிளெசிஸ் தென்னாப்பிரிக்கா 820
5 ரோஸ் டெய்லர் நியூசிலாந்து 813
6 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 803
7 ஜோ ரூட் இங்கிலாந்து 791
8 கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 790
9 குயின்டன் டி கோக் தென்னாப்பிரிக்கா 781
10 ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியா 778

 

ஒருநாள் போட்டிக்கான பௌலர்கள் தரவரிசை பட்டியல்

முதலிடத்தில் 814 புள்ளிகளுடன் பும்ராஹ் முதலிடம் வகிக்கிறார். இரண்டாம் இடத்தில நியூசிலாந்து வீரர் போல்ட் மற்றும் மூன்றாம் இடத்தில ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஆகியோர் உள்ளனர்.

தரவரிசை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ஜஸ்பிரீத் பும்ரா இந்தியா 814
2 ட்ரெண்ட் போல்ட் நியூசிலாந்து 758
3 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 698
4 காகிசோ ரபாடா தென்னாப்பிரிக்கா 694
5 இம்ரான் தாஹிர் தென்னாப்பிரிக்கா 683
6 முஜீப் உர் ரஹ்மான் ஆப்கானிஸ்தான் 681
7 மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 675
8 ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் 658
9 குல்தீப் யாதவ் இந்தியா 658
10 லாக்கி பெர்குசன் நியூசிலாந்து 650

Prabhu Soundar:

This website uses cookies.