தென்ஆப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 54-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறினார் ரோகித் சர்மா
தென்ஆப்பிரிக்கா தொடரில் மூன்று சதங்களுடன் 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா பேட்ஸ்மேன் தரவரிசையில் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா ஒரு இரட்டை சதத்துடன் மூன்று சதங்கள் விளாசினார். 500 ரன்களுக்கு மேல் குவித்த ரோகித் சர்மா, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மிகப்பெரிய அளவில் ஜம்ப் ஆகியுள்ளார்.
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன் 54-வது இடத்தில் இருந்தார். தற்போது 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே விராட் கோலி 2-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ரகானே ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். தற்போது ரோகித் சர்மாவும் 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார்.
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் முதல் 5 (அக்டோபர் 23, 2019 அன்று புதுப்பிக்கப்பட்டபடி)
பேட்ஸ்மேன்கள் பட்டியல்
- ஸ்டீவ் ஸ்மித்
- விராட் கோஹ்லி
- கேன் வில்லியம்சன்
- சேடேஷ்வர் புஜாரா
- அஜின்கியா ரஹானே
பந்து வீச்சாளர்கள் பட்டியல்
- பாட் கம்மின்ஸ்
- அதை ரஸ்தாவிடம் விடுங்கள்
- ஜேசன் ஹோல்டர்
- ஜஸ்பிரீத் பும்ரா
- ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஆல்ரவுண்டர்கள் பட்டியல்
- ஜேசன் ஹோல்டர்
- ரவீந்திர ஜடேஜா
- ஷாகிப் அல் ஹசன்
- பென் ஸ்டோக்ஸ்
- வெர்னான் பிலாண்டர்