டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு; பும்ராஜ், புஜாரா ஜெட் வேக முன்னேற்றம்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் அணிகள், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐ.சி.சி,,) இன்று வெளியிட்டது. அதில் இந்திய கேப்டன் விராட் கோலி (920 புள்ளிகள்) தனது ‘நம்பர்-1’ இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
கோலியை தவிர, இந்திய வீரர் புஜாரா (765) 4வது இடத்துக்கு முன்னேறினார். இவர்களை தவிர, மற்ற இந்திய வீரர்கள் யாரும் ‘டாப்-10’ல் இடம் பெறவில்லை. ரகானே 18வது இடம் பிடித்தார்.
இதே போல டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில், ரவிந்திர ஜடேஜா (804) ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். அஷ்வின் (786) 6வது இடத்துக்கு முன்னேறினார். முகமது ஷமி (644), 23வது இடத்திலும், உமேஷ் யாதவ், 26வது இடமும், இஷாந்த சர்மா 27வது இடமும் பெற்றனர். புவனேஷ்வர் குமார் 30 வது இடமும், பும்ரா தனது வாழ்நாள் சிறந்த இடமான 33வது இடமும் பெற்றனர்.
ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (392) இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அஷ்வின் (341) ஆறாவது இடத்தில் உள்ளார். வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன் (415) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார்.
அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில், இந்திய அணி (116) நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து (108), தென் ஆப்ரிக்கா (106) அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன.
புதிய தரவரிசை பட்டியல்;
இடம் | அணி | புள்ளிகள் |
1 | இந்தியா | 116 |
2 | இங்கிலாந்து | 108 |
3 | தென் ஆப்ரிக்கா | 106 |
4 | நியூசிலாந்து | 105 |
5 | ஆஸ்திரேலியா | 102 |
6 | இலங்கை | 93 |
7 | பாகிஸ்தான் | 92 |
8 | விண்டீஸ் | 70 |
9 | வங்கதேசம் | 69 |
10 | ஜிம்பாப்வே | 13 |