பென் ஸ்டோக்ஸ்ஸை பின்னுக்குத்தள்ளிய ரவிந்திர ஜடேஜா! ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு!

பென் ஸ்டோக்ஸ்ஸை பின்னுக்குத்தள்ளிய ரவிந்திர ஜடேஜா! ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையின் புதிய புள்ளி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்திய வீரர்கள் ஒரு சில இடங்கள் முன்னேறி உள்ளனர். எந்தெந்த வீரர்கள் தற்பொழுது புள்ளி பட்டியலில் முன்னேறி இருக்கின்றனர் என்று பார்ப்போம்

ஆல்ரவுண்டர் தரவரிசையில் முன்னேறி உள்ளார் ரவீந்திர ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ஜேசன் ஹோல்டர் எப்பொழுதும் போல முதல் இடத்தில் தன்னுடைய இடத்தை நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ்சை பின்னுக்குத் தள்ளி ரவீந்திர ஜடேஜா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீப காலத்தில் நிறைய டெஸ்ட் போட்டிகள் ரவீந்திர ஜடேஜா விளையாடாத பட்சத்திலும் அவர் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரன் அஸ்வின்


அஸ்வின் மிகச்சிறப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங்க் செய்து வந்ததை அடுத்து அவருக்கு நிறைய டெஸ்ட் புள்ளிகள் கிடைத்திருக்கிறது. அதன் காரணமாக ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முன்னேறி இருக்கிறார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் தரவரிசை ஆல்ரவுண்டர் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அதேசமயம் டெஸ்ட் தரவரிசை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பேட் கம்மின்ஸ் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தர வரிசை புள்ளி பட்டியலில் விராட் கோலி தன்னுடைய வழக்கமான ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். ரிஷப் பண்ட் விராட் கோலியை பின் தொடர்ந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் ரோகித் சர்மா நிக்கோல்ஸ்சை பின்னுக்கு தள்ளி 7 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

விராட் கோலி ரிஷப் பண்ட் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் 5,6,7 என வரிசையாக அடுத்தடுத்த இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பேட்டிங் பட்டியலில் கேன் வில்லியம்சன் தன்னுடைய முதல் இடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லாபஸ்சாக்னே இருப்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ ரூட் இருக்கிறார்.

Prabhu Soundar:

This website uses cookies.