புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி; ஆல் ரவுண்டர்களில் ஜேசன் ஹோல்டர் முதலிடம் !!

புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி; ஆல் ரவுண்டர்களில் ஜேசன் ஹோல்டர் முதலிடம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாஸ் காட்டிய விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜேசன் ஹோல்டர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பார்படோஸ் நகரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 381 ரனகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் மிகவும் சோர்வான நிலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு மத்தியில் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் இங்கிலாந்து வீரர்களுக்கு தனது அதிரடியை வெளிப்படுத்தினார். 23 பவுண்டரிகள், 8 சிக்ஸ்ர் விளாசிய அவர், 202 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தார்.

டெஸ்ட் வரலாற்றில் பேட்டிங் வரிசையில் எட்டாவது வீரராக களமிறங்கி இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஜேசன் ஹோல்டர். அதோடு இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதால், ஜ.சி.சி டெஸ்ட் தரவரிசை ஆல்  டவுண்டர் பட்டியலில் முதலிடத்தை பிடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் மூலம், ஹோல்டர் தரவரிசையில் முன்னேற்றத்தை பெற்றுள்ளதை போலவே, இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ் போன்ற ஆல் ரவுண்டர்களும் டெஸ்ட் தரவரிசையில் ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் சேர்த்த போது ஜேசன் ஹோல்டரின் கேப்டன் பொறுப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. பந்து வீச்சாளராக மட்டும் அறிப்பட்ட ஜேசன் ஹோல்டர், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு உதவியது மட்டுமல்லாமல், மிகுந்த மகிழ்ச்சியோடு 440 புள்ளிகளுடன் தரவரிசையில் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். இந்த வரிசையில் வங்க தேச அணியின் வீரர்  ஷகிப் அல் ஹசன் 415 புள்ளிகளும், இந்திய அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா 387 புள்ளிகளும் பெற்று இரண்டாவது மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

ஜேசன் ஹோல்டரின் அதிரடி மற்றும் ஆல் ரவுண்டர் பட்டியலில் முதல் இடம் பிடித்ததை கொண்டாடும் விதமாக அவரின் சொந்த நகரில் ரசிகர் மிகுந்த உற்சாகத்தோடு ஆராவரத்தில் ஈடுபட்டனர்.

 

Mohamed:

This website uses cookies.