ஒவ்வொரு தொடர் முடிவின் போதும் ஐசிசி நிர்வாகத்தால் வீரர்கள் மற்றும் அணிக்கான தரவரிசை பட்டியலை வெளியிடும். அதேபோல் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் தற்போது தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில் ஏதேனும் மாற்றம் உள்ளதா.. அல்லது அதே இடத்தில் எந்தந்த அணிகள் நீடிக்கின்றன.. குறிப்பாக இந்திய அணியின் முதல் இடத்திற்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை பார்ப்போம்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிகள் சுமார் ஒன்றரை மாதங்கள் ஆடின. அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்தியா தன் வசப்படுத்தியது. அதனை தொடர்ந்து 4வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வென்று தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சமாதான வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது. அதேசமயம் எங்கிலந்து அணியின் துவக்க வீரர் அலஸ்டர் குக் 4வது போட்டியின் முடிவில், இந்த தொடருடன் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, வெற்றியுடன் அவரை வழியனுப்ப வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணியும் களமிறங்கியது.
குக் அபாரமாக ஆடி 71 மற்றும் 147 ரன்கள் குவித்து சங்கக்கராவை பின்னுக்கு தள்ளி அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் 5வது இடம்பிடித்தார்.
இந்திய அணிக்கு 463 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து. வழக்கம்போல துவக்க வீரர் தவான் சோதப்ப, பின் வந்த கோஹ்லி மற்றும் புஜாரா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். எல் ராகுல் மற்றும் பண்ட் இருவரும் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 204 ரன்கள் அடித்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறும் தருவாயில் இருந்தது.
ரஷீத் வீசிய பந்தில் ராகுல் மற்றும் பண்ட் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் மாறியது.
கடைசியில் பும்ராவின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் 564வது விக்கெட்டை பதிவு செய்தார் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன். இதன் மூலம் மெக்ராத் சாதனையை முறியடித்து அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த தொடரை இந்தியா 1-4 என இழந்தாலும் புள்ளிப்பட்டியளில் 115 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது இந்தியா.
முழு பட்டியல் இதோ:
டெஸ்ட் அணிக்கான தரவரிசை
| தரவரிசை | அணி | போட்டிகளில் | புள்ளிகள் | மதிப்பீடு |
|---|---|---|---|---|
| 1 | இந்தியா | 35 | 4,016 | 115 |
| 2 | தென் ஆப்பிரிக்கா | 35 | 3,712 | 106 |
| 3 | ஆஸ்திரேலியா | 33 | 3,499 | 106 |
| 4 | இங்கிலாந்து | 45 | 4,722 | 105 |
| 5 | நியூசிலாந்து | 23 | 2,354 | 102 |
| 6 | இலங்கை | 38 | 3,668 | 97 |
| 7 | பாக்கிஸ்தான் | 21 | 1,853 | 88 |
| 8 | மேற்கிந்திய தீவுகள் | 29 | 2,235 | 77 |
| 9 | வங்காளம் | 19 | 1,268 | 67 |
| 10 | ஜிம்பாப்வே | 8 | 12 | 2 |