இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியில் அமர்த்தப்பட உள்ளார் தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர். இவர் உலக கோப்பையில் இருந்தும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த உலகக் கோப்பை மறக்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. காரணம், இதுவரை ஆடிய 7 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது. ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து ஆனது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியைத் தழுவிய பிறகு தென் ஆப்பிரிக்க அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியியேறுவது உறுதியானது. 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்ற தென் ஆப்பிரிக்க அணி இம்முறை லீக் சுற்றிலேயே வெளியேறுவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஹசிம் அம்லா மற்றும் டி காக் இருவரும் நிலைத்து ஆடவில்லை. பெரும்பாலும் சொற்ப ரன்களில் வெளியேறினார். நடுத்தர வரிசையில் அணியின் கேப்டன் டு பிளசிஸ் மட்டுமே சற்று ஆறுதல் தரும் விதமாக ஆடினார். டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் ஆகியோரும் எதிர்பார்த்த அளவிற்கு தங்களது செயல்பாட்டை அளிக்கவில்லை.
இத்தொடரில் டி வில்லியர்ஸ் இல்லாத குறையை டேவிட் மில்லர் தீர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆடிய நான்கு இன்னிங்ஸிலும் வெறும் 134 ரன்கள் மட்டுமே மில்லர் அடித்துள்ளார். இது அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்திருக்கிறது இந்த நிலையில் தற்போது இடுப்பில் ஏற்பட்ட தசை பிடிப்பின் காரணமாக டேவிட் மில்லர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்கப்பட உள்ளார்.
மில்லருக்குபதிலாக டுமினி களமிறக்கப்பட இருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு டுமினி காயம் காரணமாக ஆடவில்லை. இத்தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே அவர் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.