ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது போட்டி பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. இதையடுத்து நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் டேவிட் வார்னர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த திங்கட்கிழமை அன்று இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் டேவிட் வார்னர் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ‘வார்னர் அணியில் பங்கேற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். மற்ற வீரர்களை போல கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பார். அவர் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில்,
சச்சினிடம் இந்த உலகக்கோப்பையை ஆளப்போகும் இந்தியர் அல்லாது ஒரு வீரர் பெயரை சொல்லுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் பெயரை குறிப்பிட்டார்.
மேலும் அவர், ‘ டேவிட் வார்னர் ரன் எடுப்பதில் வெறித்தனமாக இருக்கிறார். இதை இந்த ஐபிஎல் தொடரில் நான் பார்த்தேன். எப்போதுமே கிரிக்கெட்டில் ஃபிட் ஆக இருப்பவர் டேவிட் வார்னர், ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் அவரது ஃபிட்னஸ் லெவல் இன்னும் அதிகமாக இருந்தது’ என்று கூறினார்.
இதே போல் பவுலர் யார் என்ற கேள்விக்கு, ‘ இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் அவர் கட்டுப்படுத்துகிறார். எப்போதெல்லாம் இங்கிலாந்து அணிக்கு விக்கெட் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆர்ச்சர் தேவைப்படுகிறார்’ என்று கூறியுள்ளார். சச்சின் கூறிய சில மணி நேரத்தில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.