அணியில் இடம்பிடிக்கும் ஜோஃப்ரா ஆர்சர்; இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள் !!

அணியில் இடம்பிடிக்கும் ஜோஃப்ரா ஆர்சர்; இங்கிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள்

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக இங்கிலாந்து அணி பார்க்கப்படுகிறது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது.

2015 உலக கோப்பையில் மோசமாக தோற்று வெளியேறிய இங்கிலாந்து அணி, அதன்பின்னர் மிகுந்த ஆக்ரோஷத்துடன் வெகுண்டெழுந்துள்ளது. இயன் மோர்கன் ஒரு கேப்டனாக, இங்கிலாந்து அணியை அபாரமாக வளர்த்தெடுத்துள்ளார்.

நல்ல ஃபார்மில் எதிரணிகளை தெறிக்கவிட்டு வெற்றிகளை குவித்துவரும் இங்கிலாந்து அணி, நம்பர் 1 ஒருநாள் அணியாக திகழ்கிறது. கவாஸ்கர், பாண்டிங், ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இங்கிலாந்து தான் இம்முறை கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக நடந்த ஒருநாள் தொடரைக்கூட அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து 4-0 என வென்றது. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த மூன்று வீரர்கள் நீக்கப்பட்டு புதிதாக 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி, ஜோ டென்லி ஆகிய மூவரும் நீக்கப்பட்டு வின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாவ்சன் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவரும் டேவிட் வில்லி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு போட்டிகள், ஐபிஎல் ஆகியவற்றில் அபாரமாக வீசியதோடு, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக பந்துவீசிய இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜோ டென்லி நீக்கப்பட்டு டாவ்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்ச்சரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் சேர்க்கவில்லை என்பதே பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியிருந்தது. அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சரை சேர்ப்பதற்காக யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என முன்னாள் வீரர் ஃப்ளிண்டாஃப் அதிரடியாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது.

Mohamed:

This website uses cookies.