இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா: உலககோப்பை முதல் போட்டியில் நாளை பலப்பரிட்சை! வெல்லப்போவது யார்?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள, 12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்குகிறது.

உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது. உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 10 நகரங்களில் 11 மைதானங்களில் 48 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முந்தைய இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் 14 அணிகள் பங்கேற்ற நிலையில்,‌ நடப்புத் தொடரில் 10 அணிகள் மட்டுமே களம் காண்கின்றன.

இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை மோதிய ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா அணி அதிமாக வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் மொத்தம் இங்கிலாந்து தென் ஆப்ரிக்கா முடிவு இல்லை டிரா
ஒருநாள் 59 26 29    3 1
டெஸ்ட் 149 60 34     – 55
டி 20 14 5 8 1     –

 

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்‌தத் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக்கோப்பை தொடருக்கான நேரடி வாய்ப்பை பெற்றது. தரவரிசையின் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் தகுதி பெற்றன.

வெஸ்ட் இண்டீஸ் ‌மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று, உலகக்கோப்பை தொடருக்கு தகுதியாகின. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு உலகக்கோப்பையுடன் 28 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

12-வது உலகக்கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடர் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் ஒருநாள் போட்டி தரவரிசை அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதி சுற்றுமூலம் நுழைந்தன.

போட்டி அமைப்பில் இந்த முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1992 உலகக்கோப்பையில் பின்பற்றப்பட்ட முறை தற்போது கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மோத வேண்டும். அதாவது ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும்.

‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

 

 

Sathish Kumar:

This website uses cookies.