தோனிய விமர்சிப்பது சரியல்ல; தோனிக்கு முன்னாள் ஜாம்பவான் ஆதரவு !!

தோனிய விமர்சிப்பது சரியல்ல; தோனிக்கு முன்னாள் ஜாம்பவான் ஆதரவு

முன்னாள் கேப்டன் தோனியை கடுமையாக விமர்சிப்பது முறையானது அல்ல என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் டோனி விமர்சனத்திற்கு உள்ளானார். அதிரடியாக விளையாடாமல் மந்தமாக ஆடி வருவதாக அவரை ஒரு சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிரான அவரது ஆட்டத்தை கடுமையாக சாடி இருந்தனர்.

India’s Yuzvendra Chahal (C) celebrates with teammates including captain Virat Kohli (2R) after the dismissal of New Zealand’s captain Kane Williamson during the 2019 Cricket World Cup first semi-final between India and New Zealand 

இந்த நிலையில் டோனி மீதான விமர்சனத்திற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலக கோப்பை போட்டியை காண இங்கிலாந்து சென்றுள்ள அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

டோனி மீதான விமர்சனத்தில் எந்த வித நியாயமும் இல்லை. அவரை விமர்சிப்பதும் துரதிஷ்டவசமானது. இந்திய கிரிகெட்டின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

அவர் தனது பணியை இந்திய அணிக்காக சிறப்பாக செய்து வருகிறார். அவர் நல்ல நிலையில் இருப்பது அணிக்கு முக்கியமானது. டோனியின் விக்கெட் கீப்பிங் பணியும் சிறப்பாக இருக்கிறது.

விராட் கோலி ஆக்ரோ‌ஷமான கேப்டன். அவருக்கு எல்லா வகையிலும் டோனி உதவியாக இருந்து செயல்படுகிறார்” என்றார்.

இந்திய அணி 2 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. இதற்கு கபில்தேவும், டோனியும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.

1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை கைபற்றியது. 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011-ல் டோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வென்றது.

 

Mohamed:

This website uses cookies.