ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா !!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

சவுத்தாம்டனில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் விளையாடாததால் அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதே போல் ஷிகர் தவானுக்கு பதிலாக வழக்கம் போல கே.எல் ராகுலே துவக்க வீரராக களமிறங்குகிறார்.

அதே வேளையில் ஆஃப்கானிஸ்தான் அணியும், நுர் அலி மற்றும் தல்வாத் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அஃப்தாப் மற்றும் ஹஜ்ரத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணி;

கே.எல் ராகுல்,ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, விஜய் சங்கர், தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.

இன்றைய போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணி;

ஹசரத்துல்லாஹ் ஜாசி, குல்புதின் நபி, ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லாஹ் ஷாஹிதி, அஸ்கார் அஃப்கான், முகமது நபி, இக்ராம் அலி கில், நஜிபுல்லாஹ் ஜர்டான், ரசீத் கான், அஃப்தாப் அலம், முஜிபுர் ரஹ்மான்.

Mohamed:

This website uses cookies.