பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஃப்கானிஸ்தான்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
பாகிஸ்தான் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் குல்புதின் நைப் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணி;
குல்பதின் நைப், ரஹ்மத் ஷாஹ், ஹஸ்மத்த்ஹுல்லாஹ் ஷாஹிதி, அஸ்கர் அஃப்கான், முகமது நபி, சமியுல்லாஹ் சின்வாரி, நஜிபுல்லாஹ் ஜார்டன், இக்ரான் அலி கில், ரசீத் கான், ஹமீத் ஹசன், முஜிபுர் ரஹ்மான்.
இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணி;
இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹரீஸ் சோஹைல், சர்பராஸ் அஹமது, இமாத் வசீம், ஷாதப் கான், வகாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹின் அப்ரிடி.
உலக கோப்பை தொடரை மோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தை அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
இந்த உலக கோப்பையில் இதுவரை 7 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அதேநேரத்தில் இங்கிலாந்து அணி அதன் எஞ்சிய 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றால்கூட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.
அந்த வகையில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது பாகிஸ்தான். ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. எனவே அந்த அணிக்கு இந்த உலக கோப்பை தொடரில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டி.