உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்புசீட்டு தோனி – ரோஹித் சர்மா கருத்து

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தோனி துருப்பு சீட்டாக இருப்பார். மேலும் அவரின் கீப்பிங் முக்கிய கட்டங்களில் உதவும் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் தங்களது உலககோப்பையில் ஆடும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து விட்டனர். இந்திய அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை அறிவித்தது. அதில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக அனுபவம் மிக்க வீரர்கள் தினேஷ் கார்த்திக் கிற்கு இடம் கொடுக்கப்பட்டது. அதேபோல 4வது இடத்திற்கு அம்பதி ராயுடு இடம் பெறுவார் என இருந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் விஜய் சங்கருக்கு கொடுக்கப்பட்டது.

இதனால், தேர்வுக்குழுவினர் பெரும் விமர்சனத்தை சந்திக்க நேரிட்டது. ஆனால், பண்ட் விஜய் சங்கர்  இருவரும் ஏன் அணியில் இடம்பெறவில்லை என தேர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் விளக்கம் கொடுத்துவிட்டார்.

உலககோப்பைக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் குறிப்பாக உலககோப்பைக்கு செல்லும் வீரர்கள் நன்கு செயல்பட்டு வருகின்றனர்.

டெல்லி அணிக்கு ஆடும் தவான், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா கடந்த போட்டியில் அரைசதம் அடித்து தனது பார்மிற்கு திரும்பியுள்ளார்.

தோனி இந்த வருட துவக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால், கடந்த சில போட்டிகளாக அவர் சென்னை அணிக்காக ஆடவில்லை. உடல்நல குறைவு, முதுகு வலி பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். உலககோப்பைக்கு ஆடுவதற்கு தோனி தயாராக இருக்க வேண்டும் என்பதால் கிடைக்கும் நேரங்களில் ஓய்வெடுக்கிறார்.

இந்நிலையில் மும்பை அணியுடன் நடந்த போட்டியில் தோனி ஆடவில்லை அந்த போட்டியில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. தற்போது தோனி குறித்தும் உலகக்கோப்பையில்  அவரது முக்கியத்துவம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் ரோஹித் சர்மா.

அவர் கூறுகையில், உலககோப்பைக்கு இந்திய அணியின் துருப்பு சீட்டாக தோனி இருப்பார். அவரது கேப்டன் அனுபவம் எனக்கும் விராத் கோலிக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். மேலும், அவரின் மின்னல் வேக கீப்பிங் இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற செய்ததை நாம் கண்டிருக்கிறோம் என்றும் புகழாரம் சூட்டினார் ரோஹித்.

 

Prabhu Soundar:

This website uses cookies.