உலகக்கோப்பையில் மாஸ் காட்டுவேன்; ஜடேஜா உறுதி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத் தில் நேற்று முன்தினம் நியூஸிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிக பட்சமாக 54 ரன்களைக் குவித்திருந்தார் ஜடேஜா. இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, “இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப சூழல் வேறாக இருக் கிறது. இந்த சூழ்நிலையில் இங்கு விளை யாடுவது தொடக்கத்தில் எளிதாக இருந்தது.
இது எங்களுக்கு முதல் ஆட்டம். ஆனால் இந்த ஆட்டம் எங்களுக்கு மோச மாக அமைந்தது. ஒரு ஆட்டத்தை வைத்து இந்திய வீரர்கள் மோசமாக விளையாடு கிறார்கள் என்று சொல்ல முடியாது. இது ஒரு மோசமான ஆட்டமாக எங்களுக்கு அமைந்துவிட்டது. அவ்வளவுதான். எனவே அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இங்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வந்துள்ளோம். எங்களது பேட்டிங் தொழில் நுட்பத்தைக் கொண்டு சிறப்பாக விளை யாட முயற்சி செய்வோம். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்களை வீழ்த்து வேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான பயிற்சியில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு எங்களை நாங்கள் தகவமைத்துக் கொண்டு வருகிறோம்” என்றார்.