உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவோம் – பாகிஸ்தான் கேப்டன் சூளுரை

நடக்கவிருக்கும் உலக கோப்பையில் இந்திய அணியை கட்டாயம் வீழ்த்தியே தீருவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது சூளுரைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற இருக்கிறது. மே 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டு முதல்முறையாக ஏ, பி, சி என்ற பிரிவுகள் அல்லாமல் ஒரே பிரிவாக ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடக்க இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை ஒருமுறையாவது எதிர்கொள்ளும். புள்ளி பட்டியலின் அடிப்படையில் முதல் நான்கு இடம் பெறும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இவ்வாறாக இந்த ஆண்டு தொடர் நடக்க இருக்கிறது.

ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கான 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை அறிவித்துவிட்டன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான மோதல் அனைவரும் அறிந்த ஒன்று. அங்கு மட்டுமல்லாமல் கிரிக்கெட் உலகிலும் பரம எதிரிகளாக கருதப்படும் நாடும் இந்தியா-பாகிஸ்தான் தான். இந்த இரு அணிகள் மோதும் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும். காரணம், அந்த அளவிற்கு போட்டியில் அனல் பறக்கும். உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தியதே இல்லை.

உலக கோப்பை தொடருக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, இம்முறை உலகக் கோப்பையில் இந்திய அணியை கட்டாயம் வீழ்த்துவோம் என சூளுரைத்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ” சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி எப்படி நசுக்கியது என்பதை அனைவரும் கண்டிருப்பர். அதே போல உலக கோப்பையில் நடக்கும் போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்துவோம். நான் வெளியில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் தொடர்ந்து கேட்கும் கேள்வி,  இந்த உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவீர்கள் தானே என்பதுதான். இதிலிருந்து ரசிகர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை உணருகிறோம். அதை மனதில் கொண்டு சிறப்பாக ஆடுவோம்” என்றார்.

 

Prabhu Soundar:

This website uses cookies.