தோல்வியை மறந்து இங்கிலாந்தில் ஜாலியாக ஊர் சுற்றும் இந்திய வீரர்கள் ; செம கடுப்பில் ரசிகர்கள் !!

தோல்வியை மறந்து இங்கிலாந்தில் ஜாலியாக ஊர் சுற்றும் இந்திய வீரர்கள் ; செம கடுப்பில் ரசிகர்கள்

இந்திய அணி வீரர்கள் சிலர், உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிபோட்டி வரை இங்கிலாந்தில் இருப்பார்கள் என்று தெரிய வந்ததுள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முன்னேறின. முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இந்நிலையில், மான்செஸ்டரில் இந்திய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை வீரர்கள் காலி செய்துவிட்டனர். ஆனாலும் அவர்களுக்கு நாடு திரும்ப விமான டிக்கெட் உடனடியாக எடுத்துக் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

BIRMINGHAM, ENGLAND – JULY 11: Eoin Morgan of England (R) celebrates victory with team mate Joe Root during the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between Australia and England at Edgbaston on July 11, 2019 in Birmingham, England. (Photo by Andy Kearns/Getty Images)

இந்திய அணியில் உள்ள சில வீரர்கள், இறுதிபோட்டி வரை இங்கிலாந்திலேயே, தங்க உள்ளனர். அதனால் அவர்களுக்கு, அதற்கு அடுத்த சில நாட்களில் விமான டிக்கெட் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் சில வீரர்களுக்கு மட்டும் அதற்கு முன் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.