குவாலிபயர் லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸை சூப்பர் ஓவரில் வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய நெதர்லாந்து அணிக்கு ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவற்றை கீழே காண்போம்.
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை குவாலிபயர் லீகில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நெதர்லாந்து இரு அணிகளும் மோதிக்கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்கள் பிரண்டன் கிங் 76 ரன்கள், சார்லஸ் 54 ரன்கள் அடித்து வெளியேறினர். பின்னர் சாய் ஹோப் 47 ரன்கள் அடித்து அவுட்டாகினர். நிக்கோலஸ் பூரன்(104), கீமோ பால்(46) இறுதிவரை ஆட்டமிழக்காமல் பார்ட்னர்ஷிப் அமைக்க, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
நெதர்லாந்து அணிக்கு டாப் ஆர்டர் வீரர்கள் விக்ரம்ஜித்சிங் 37 ரன்கள், மேக்ஸ் 36 ரன்கள், வெஸ்லி 27 ரன்கள் மற்றும் லீடே 33 ரன்கள் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தபின் வெளியேறினர். தேஜா மற்றும் எட்வார்ட்ஸ் இருவரும் சேர்ந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இதில் எட்வார்ட்ஸ் 67 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசி வரை போராடிய தேஜா 111 ரன்கள் அடித்து வெளியேறினார். லோகன் வான் பீக் 28 ரன்கள் அடித்தார். இறுதியாக நெதர்லாந்து அணியும் 50 ஓவர்களில் 374 ரன்கள் அடித்ததால் ஸ்கொர் சமனில் இருந்தது.
சூப்பர் ஓவர் நடைபெற்றதில்,
நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. லோகன் வேன் பீக் பேட்டிங் செய்தார். இவர் ஜேசன் ஹோல்டர் வீசிய சூப்பர் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடித்து 30 ரன்கள் எட்டுவதற்கு உதவினார்.
6 பந்துகளில் 31 ரன்கள் எனும் மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய நிலைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தள்ளப்பட்டது. சூப்பர் ஓவரில் 30 ரன்கள் அடித்த வேன் பீக், சூப்பர் ஓவரில் பவுலிங்கும் செய்தார். இவர் முதல் மூன்று பந்துகளில் எட்டு ரன்கள் விட்டுக் கொடுத்தார். அடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வரிசையாக எடுத்துக் கொடுத்து நெதர்லாந்து அணியை வெற்றிபெற செய்தார்.
ஒற்றையாளாக நின்று வெற்றி பெற்றுக்கொடுத்த லோகன் வான் பீக் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவருக்கு ஜாம்பவான்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டவிட்டரில் குவித்த பாராட்டுக்கள்: