இப்படியொரு கட்டுப்பாட்டை இந்திய அணியில் நடைமுறை படுத்தவேண்டும் ; இந்திய அணிக்கு புதுவித யோசனையை தெரிவித்த ஆகாஷ் சோப்ரா !!

இப்படியொரு கட்டுப்பாட்டை இந்திய அணியில் நடைமுறை படுத்தவேண்டும் ; இந்திய அணிக்கு புதுவித யோசனையை தெரிவித்த ஆகாஷ் சோப்ரா..

இந்திய அணியில் இடம்பெறும் பேட்ஸ்மேன்களுக்கு கட்டாயம் பந்து வீசத் தெரிந்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

 

ஐசிசி நடத்தும் 13வது உலகக் கோப்பை தொடர் இந்தாண்டு(2023) அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த முறை உலககோப்பையை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்து நடத்துகிறது.

இதனால் ஒவ்வொரு அணியும் எப்படியாவது இந்த முறை உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்று கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருவதோடு , இருதரப்பு தொடர்களில் அதிகமாக பங்கேற்று அணியை செட் செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

ஆனால் தற்போது இருக்கும் நிலைமையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மற்றும் பௌலிங் லைன்-அப் என இரண்டுமே சற்று பரிதாப நிலையில்தான் உள்ளது. ஏனென்றால் ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல்,பும்ரா, மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்ட இந்திய அணி முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்கு மாற்று எந்த வீரர்களை வைத்து விளையாடுவது என்று குழப்பம் இந்திய அணியில் நீடிக்கிறது இதனால் உலகக்கோப்பை தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என பெரும்பாலானவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியா அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்மான ஆகாஷ் சோப்ரா., சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கும் இந்திய அணியில் பந்துவீசத் தெரிந்த பேட்ஸ்மேன்களை அணியில் வைத்திருக்க வேண்டும் என இந்திய அணிக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.

 

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில்., தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் பேட்ஸ்மேன்களால் இரண்டு ஓவர்கள் கூட பந்து வீச முடியாதது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. முதலில் இந்திய அணி இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பேட்ஸ்மேன்களுக்கும் பந்து வீச தெரிந்திருக்க வேண்டும் என்பதில் இந்திய அணி கொஞ்சம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தற்போது இளம் வீரர்களான யஷஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா ஆகிய வீரர்களுக்கு சிறப்பாக செயல்பட்டதால் அதிக வாய்ப்பு கொடுப்பீர்கள், எனவே அவர்களை பந்து வீசுவதற்கும் அதிகம் உற்சாகம் ஊட்ட வேண்டும். டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் இந்த திட்டத்தின் அடிப்படையில் தான் இடம்பெற்று வருகிறார்” என இந்திய அணி தேர்வாளர்களுக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை கொடுத்திருந்தார்.

சவுரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட வீரர்கள் இருந்த பொழுது இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் யுவராஜ் சிங் மற்றும் இன்னும் சில பேட்ஸ்மேன்கள் அவ்வப்போது தங்களுடைய பந்து வீசும் திறமையை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருந்தனர். ஆனால் அது போன்ற நிகழ்வுகள் தற்பொழுது இந்திய அணியில் இல்லை என்பதால் ஆகாஷ் சோப்ரா இது போன்ற அறிவுரையை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.