எப்படியும் அந்த பையனுக்கு இடம் கொடுக்க போறது இல்ல… அப்பறம் எதுக்குடா இந்த தேவை இல்லாத வேல; இந்திய அணி மீது முன்னாள் வீரர் கடும் காட்டம் !!

எப்படியும் அந்த பையனுக்கு இடம் கொடுக்க போறது இல்ல… அப்பறம் எதுக்குடா இந்த தேவை இல்லாத வேல; இந்திய அணி மீது முன்னாள் வீரர் கடும் காட்டம்

விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் இஷான் கிஷனை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணியின் முடிவை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும், இரண்டாவது போட்டியில் படுதோல்வியையும் சந்தித்த இந்திய அணி, கடைசி போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.

விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும், இந்த தொடரில் இந்திய அணி தனது ஆடும் லெவனில் செய்த தேவையற்ற மாற்றங்கள் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான ஆடும் லெவனில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளித்த இந்திய அணி, இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்து பரிசோதித்தது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது நல்ல விசயமாக தோன்றினாலும், 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில் இளம் வீரர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், அவர்களது பேட்டிங் ஆர்டரை மாற்றி தேவையற்ற பரிசோதனைகள் செய்வது ஏற்புடையது அல்ல என முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ராவும் விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் இஷான் கிஷனை துவக்க வீரராக களமிறக்கிய இந்திய அணியின் முடிவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “2022ம் ஆண்டு டி.20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி பாடம் படித்து கொள்ளாமல், அப்போது செய்த தவறுகளை தொடர்ந்து செய்து வருவதுஎனக்கு கவலையை கொடுத்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பே இல்லை என்ற போது எதற்காக அவரை விண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் துவக்க வீரராக களமிறக்க வேண்டும்..? ஒருவேளை சுப்மன் கில்லையும், இஷான் கிஷனையும் உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரர்களாக களமிறக்க இந்திய அணி திட்டமிட்டு வருகிறதா என தெரியவில்லை. அப்படி ஒரு முடிவு எடுத்தால் ரோஹித் சர்மா 3வது வீரராக களமிறங்குவாரா..? விராட் கோலி 4வது இடத்தில் களமிறங்குவாரா..? இந்திய அணியின் இது போன்ற முட்டாள்தனமான முடிவுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

 

Mohamed:

This website uses cookies.