வங்கதேச அணிக்கு அடுத்து இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.. முன்னாள் வங்கதேச வீரர் சொல்கிறார் !!

வங்கதேச அணிக்கு அடுத்து இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.. முன்னாள் வங்கதேச வீரர் சொல்கிறார்..

எதிர்வரும் ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் அரையறுதி போட்டிக்கு முன்னேற போகும் நான்கு அணிகள் இவர்கள்தான் என வங்கதேச அணியின் முன்னாள் வீரர் அத்தர் அலி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது.

 

இந்த முறை இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ம் தேதி நிறைவடைய உள்ளது.

 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருவதால் முன்னாள் வீரர்கள் பலர் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் உலகக்கோப்பை தொடர் குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் வங்கதேச ஆணியின் முன்னாள் வீரர் அத்தர் அலி., உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

இதுகுறித்து அத்தர் அலி பேசுகையில்., “நான் முன்பு கூறியது போல பங்களாதேஷ் அணி இந்த வரிசையில் இடம் பெறும். அதே போன்று இந்தியாவும் ஒரு நாள் உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றிக்கு முன்னேறும்.இவர்களை அடுத்து சிறந்த வேகம் பந்துவீச்சாளர் மற்றும் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய அணி அரை-இறுதி சுற்றுக்கு முன்னேறும் அவர்களிடம் டீப் பேட்டிங் லைன்-அப் மற்றும் பவர்ஃபுல் ஸ்ட்ரைக்கர்ஸ் உள்ளனர். இந்த மூன்று அணிகள் நிச்சயம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவது உறுதி. இதை தவிர்த்து நான்காவது அணியாக கூற வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் அல்லது இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணியாக இருக்கலாம்” என்று அத்தர் அலி தெரிவித்திருந்தார்.

Mohamed Ashique:

This website uses cookies.