ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் தேவையே இல்ல… இவுங்கள மட்டும் எடுங்க போதும்; உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !!

ஸ்ரேயஸ் ஐயர் தேவையே இல்ல… இவுங்கள மட்டும் எடுங்க போதும்; உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது.

அக்டோபர் மாதம் 5ம் தேதி துவங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், நவம்பர் மாதம் 19ம் தேதி நிறைவடைய உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற உள்ளது, இந்த தொடர் மீது மிக அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெறுவதால் மற்ற அணிகளை விட இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கே வாய்ப்புகள் சற்று அதிகமாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த முறையாவது இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

அதே போல் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றர். உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொடர்ந்து பேசி வரும் முன்னாள் வீரர்கள், உலகக்கோப்பை தொடருக்கான தங்களது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

தனது அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுடன், சுப்மன் கில்லை தேர்வு செய்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மூன்றாவது அடுத்ததாக ஷிகர் தவானையும் தேர்வு செய்துள்ளார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் விராட் கோலி, கே.எல் ராகுல்  ஆகியோரையும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது அணியில் தேர்வு செய்துள்ளார்.

விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ள மஞ்ச்ரேக்கர், ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராஹ், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோரை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது அணியில் தேர்வு செய்துள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ள இந்திய அணி;

ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஷிகர் தவான், விராட் கோலி, கே.எல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ராஹ், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், சஞ்சு சாம்சன், பிரசீத் கிருஷ்ணா.

Mohamed:

This website uses cookies.