ஐசிசி உலகக்கோப்பை அட்டவணை வெளியானது! – 12 மைதானங்களில் போட்டிகள்… ஒவ்வொரு மைதானத்திலும் எப்போது போட்டிகள் நடக்கும்? – முழு லிஸ்ட்!

2023 ஐசிசி 50-ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவனை வெளியாகியுள்ளது. இம்முறை இந்தியாவில் நடக்கிறது. மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறும் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. 8 அணிகள் தரவரிசை பட்டியல் அடிப்படையில் உறுதியாகிவிட்டது. மீதமிருக்கும் 2 இடங்களுக்கு குவாலிபயர் போட்டி நடக்கிறது.

சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, தர்மசாலா, லக்னோ, புனே, மும்பை ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடக்கின்றன. அக்டொபார் 5ஆம் தேதி துவங்கி, நவம்பர் மாதம் 19ஆம் தேதி இறுதிபோட்டி நடக்கிறது.

ஒவ்வொரு மைதானத்திலும் எப்போது போட்டி நடக்கிறது என்பதை மைதானம் வாரியாக பார்க்கலாம். அதற்கு முன் இந்திய அணி மோதும் போட்டிகள் எங்கே நடக்கிறது என்பதை முதலாவதாக காண்போம்.

இந்திய அணி மோதும் லீக் போட்டிகள் விவரம்:

  • இந்தியா vs ஆஸ்திரேலியா, அக்டோபர் 8 – சென்னை
  • இந்தியா vs ஆப்கானிஸ்தான், அக்டோபர் 11 – டெல்லி
  • இந்தியா vs பாகிஸ்தான், அக்டோபர் 15 – அகமதாபாத்
  • இந்தியா vs வங்கதேசம், அக்டோபர் 19 – புனே
  • இந்தியா vs நியூசிலாந்து, அக்டோபர் 22 – தர்மசாலா
  • இந்தியா vs இங்கிலாந்து, அக்டோபர் 29 – லக்னோ
  • இந்தியா vs குவாலிஃபையர் 2, நவம்பர் 2 – மும்பை
  • இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, நவம்பர் 5 – கொல்கத்தா
  • இந்தியா vs குவாலிஃபையர் 1, நவம்பர் 11 – பெங்களூரு

அகமதாபாத்

  • அக்டோபர் 5 – இங்கிலாந்து vs நியூசிலாந்து
  • அக்டோபர் 15 – இந்தியா vs பாகிஸ்தான்
  • நவம்பர் 4 – இங்கிலாந்து எதிராக ஆஸ்திரேலியா
  • நவம்பர் 10 – தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்
  • நவம்பர் 19 – உலகக்கோப்பை இறுதிபோட்டி

ஹைதராபாத்

  • அக்டோபர் 6 – பாகிஸ்தான் vs குவாலிஃபையர் 1
  • அக்டோபர் 9 – நியூசிலாந்து vs குவாலிஃபையர் 1
  • அக்டோபர் 12 – பாகிஸ்தான் vs குவாலிஃபையர் 2

தர்மசாலா

  • அக்டோபர் 7 – பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் (பகல் ஆட்டம்)
  • அக்டோபர் 10 – இங்கிலாந்து vs பங்களாதேஷ்
  • அக்டோபர் 16 – தென்னாப்பிரிக்கா vs குவாலிஃபையர் 1
  • அக்டோபர் 22 – இந்தியா vs நியூசிலாந்து
  • அக்டோபர் 29 – ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து (பகல் ஆட்டம்)

டெல்லி

  • அக்டோபர் 7 – தென்னாப்பிரிக்கா vs குவாலிஃபையர் 2
  • அக்டோபர் 11 – இந்தியா vs ஆப்கானிஸ்தான்
  • அக்டோபர் 15 – இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
  • அக்டோபர் 25 – ஆஸ்திரேலியா vs குவாலிஃபையர் 1
  • நவம்பர் 6 – பங்களாதேஷ் vs குவாலிஃபையர் 2

சென்னை

  • அக்டோபர் 8 – இந்தியா vs ஆஸ்திரேலியா
  • அக்டோபர் 14 – நியூசிலாந்து vs பங்களாதேஷ் (பகல் ஆட்டம்)
  • அக்டோபர் 18 – நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான்
  • அக்டோபர் 23 – பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான்
  • அக்டோபர் 27 – பாகிஸ்தான் vs தென் ஆப்பிரிக்கா

லக்னோ

  • அக்டோபர் 13 – ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
  • அக்டோபர் 17 – ஆஸ்திரேலியா vs குவாலிஃபையர் 2
  • அக்டோபர் 21 – குவாலிஃபையர் 1 vs குவாலிஃபையர் 2 (பகல் ஆட்டம்)
  • அக்டோபர் 29 – இந்தியா vs இங்கிலாந்து
  • நவம்பர் 3 – தகுதிச் சுற்று 1 vs ஆப்கானிஸ்தான்

புனே

  • அக்டோபர் 19 – இந்தியா vs பங்களாதேஷ்
  • அக்டோபர் 30 – ஆப்கானிஸ்தான் vs குவாலிஃபையர் 2
  • நவம்பர் 1 – நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • நவம்பர் 8 – இங்கிலாந்து vs குவாலிஃபையர் 1
  • நவம்பர் 12 – ஆஸ்திரேலியா vs பங்களாதேஷ் (பகல் ஆட்டம்)

பெங்களூரு

  • அக்டோபர் 20 – ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
  • அக்டோபர் 26 – இங்கிலாந்து vs குவாலிஃபையர் 2
  • நவம்பர் 4 – நியூசிலாந்து vs பாகிஸ்தான் (பகல் ஆட்டம்)
  • நவம்பர் 9 – நியூசிலாந்து vs குவாலிஃபையர் 2
  • நவம்பர் 11 – இந்தியா vs குவாலிஃபையர் 1

மும்பை

  • அக்டோபர் 21 – இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • அக்டோபர் 24 – தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்
  • நவம்பர் 2 – இந்தியா vs குவாலிஃபையர் 2
  • நவம்பர் 7 – ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான்
  • நவம்பர் 15 – முதல் அரையிறுதி 

கொல்கத்தா

  • அக்டோபர் 28 – தகுதிச் சுற்று 1 vs பங்களாதேஷ்
  • அக்டோபர் 31 – பாகிஸ்தான் vs பங்களாதேஷ்
  • நவம்பர் 5 – இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
  • நவம்பர் 12 – இங்கிலாந்து vs பாகிஸ்தான்
  • நவம்பர் 16 – இரண்டாவது அரையிறுதி 

 

Mohamed:

This website uses cookies.