சதத்தில் சதம் அடிக்க வேண்டும் என விராட் கோலி ஒருபோதும் எண்ணியது கிடையாது,அவருடைய மிகப்பெரிய ஆசையே இதுதான் ; விராட் கோலியின் ஆசையை தெரிவித்த முன்னாள் வீரர் !!

சதத்தில் சதம் அடிக்க வேண்டும் என விராட் கோலி ஒருபோதும் எண்ணியது கிடையாது,அவருடைய மிகப்பெரிய ஆசையே இதுதான் ; விராட் கோலியின் ஆசையை தெரிவித்த முன்னாள் வீரர்..

சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை மனதில் வைத்து விராட் கோலி செயல்படுவது கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

 

சமகால கிரிக்கெட் தொடரில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என கருதப்படும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இதுவரை சர்வதேச அளவில் 76 சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கர்க்கு பிறகு மிகப் பெரிய சாதனை ஒன்றை படைக்த்துள்ளார்.

இன்னும் கூடிய விரைவில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 100 சதங்களையும் அடித்து விடுவார் என்பதால் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

ஆனால் பெரும்பாலான முன்னால் வீரர்கள் விராட் கோலி மீதான இந்த எதிர்பார்ப்பால் அவருக்கு அதிக அழுத்தம் ஏற்படலாம் என்றும் விராட் கோலியை தேவையில்லாமல் தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா., விராட் கோலி சாதனையை முறியடிப்பதற்காக எப்பொழுதும் செயல்படுவது கிடையாது அவருடைய நோக்கமே வேறு என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்,

 

இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசுகையில்., “விராட் கோலி ஒருபோதும் சாதனையை முடிய வைக்க வேண்டும் என விளையாடுவது கிடையாது. ஆனால் ரசிகர்களாகிய நாம் தான் அவர் சாதனையை முறியடிக்க வேண்டும் என எண்ணுகிறோம். விராட் கோலியின் சதங்களால் இந்திய அணி பல போட்டிகளை வென்றுள்ளது. ஆனால் விராட் கோலியின் முழு நோக்கம் இந்திய அணி எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. அவர் எந்த ஒரு சாதனைக்காகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை. எதிர்வரும் ஆசிய கோப்பையிலோ அல்லது உலக கோப்பையிலே அல்லது அவருடைய கிரிக்கெட் கரியில் ஏதாவது ஒரு புள்ளியிலோ அவர் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை முறியடித்து விட்டால் அது அவருக்கு ஒன்றும் பெரிதாக இருக்காது. ஏனென்றால் அவருடைய முழு நோக்கமும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே” என விராட் கோலி குறித்து ராபின் உத்தப்பா பேசியிருந்தது குறிப்பிடதக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.