எங்கள பார்த்து சிரிச்ச எல்லாருக்கும் இனி பிரச்சனை தான்… புள்ளி பட்டியலில் கெத்தாக முன்னேறியது ஆஸ்திரேலிய அணி !!

எங்கள பார்த்து சிரிச்ச எல்லாருக்கும் இனி பிரச்சனை தான்.. புள்ளி பட்டியலில் கெத்தாக முன்னேறியது ஆஸ்திரேலிய அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தனது முதல் போட்டியிலேயே இந்திய அணியை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்து, படுதோல்வியுடன் உலகக்கோப்பை தொடரை துவங்கியது.ட் இதன்பின் நடைபெற்ற தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியை சந்தித்ததன் மூலம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கும் சென்ற ஆஸ்திரேலிய அணி, தனது மூன்றாவது போட்டியில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கணக்கை துவங்கியது.

தனது நான்காவது போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 367 ரன்கள் குவித்தது. பேட்டிங்கை போலவே பந்துவீச்சிலும் மிக சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 62 ரனக்ள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணியே முதல் இடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்திய அணி நீடிக்கிறது. அதே போல் தென் ஆப்ரிக்கா அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் முறையே ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு பிறகான புள்ளி பட்டியல்; 

Mohamed:

This website uses cookies.