ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தானை அலறவிட்டதற்கு கிடைத்த சிறப்பு பரிசு… புள்ளி பட்டியலில் கெத்தாக முன்னேறியது இந்திய அணி !!

ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தானை அலறவிட்டதற்கு கிடைத்த சிறப்பு பரிசு… புள்ளி பட்டியலில் கெத்தாக முன்னேறியது இந்திய அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான அபார வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய 50 ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தனது முதல் போட்டியிலேயே ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி, பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதே அதே உத்வேகத்துடன் தனது அடுத்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இந்தநிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் எதிராக அபார வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான புள்ளி பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியதால், பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இங்கிலாந்து அணி 5வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 7வது இடத்திலும் உள்ளன.

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டிக்கு பிறகான புள்ளி பட்டியல்; 

Mohamed:

This website uses cookies.