ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கடந்த சில மாதங்களாக ஆவலுடன் காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுதாம்டனில் நடைபெற்றது.
சமபலம் கொண்ட இந்தியா நியூசிலாந்து இடையேயான இந்த போட்டியில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
அடுத்த டெஸ்ட் சாம்பியன்சிப் 2023ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரின் மூலம் கிடைத்த அனுபவங்கள் மற்றும் படிப்பினைகள் மூலம் ஒவ்வொரு அணியும் அடுத்த தொடருக்காக இப்பொழுதில் இருந்தே தயாராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அந்தவகையில், மிக விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ள நான்கு கேப்டன்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்து வரும் ஜாசன் ஹோல்டர் இதுவரை தான் கேப்டன் ஆனபிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி 6 தொடர்களில் 12 போட்டிகளில் விளையாடி அதில் மூன்றே மூன்று போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றது,மேலும் அதில் 7 போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் பரிதாபமாக தோல்வியடைந்தது மற்றும் இரண்டு போட்டிகள் டிரா ஆனது.
இந்நிலையில் டெஸ்ட் தரவரிசை புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன் ஹோல்டரின் இந்த மோசமான செயல்பாட்டால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி இவரிடமிருந்து பறித்து வேறு ஒரு வீரர் இடம் கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் கிரெய்க் பிரத்வெயிட் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்துவந்த்தார் அவர் சரியாக செயல்படவில்லை என்றுதான் ஜேசன் ஹோல்டர் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.