டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியல் அறிவிப்பு! தடாலடியாக முன்னேறிய இங்கிலாந்து இந்தியாவிற்கு எந்த இடம்!
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரை 2க்கு1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது, இதன் காரணமாக மொத்தம் 80 புள்ளிகளைப் பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி.
மொத்தம் இதன் மூலம் 226 புள்ளிகள் பெற்றுள்ளது இங்கிலாந்து. ஏற்கனவே நான்கு தொடரில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி மூன்று தொடர்களில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 296 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதனை அடுத்து மூன்றாவது இடத்திற்கு இங்கிலாந்து அணி 226 புள்ளிகளுடன்
டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அல்ஸாரி ஜோசப்புக்குப் பதிலாக ரகீம் கார்ன்வெல் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர், வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றார்கள்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 111.5 ஓவர்களில் 369 ரன்கள் எடுத்தது. மே.இ. தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் முன்னிலை பெற்றது. பிறகு தனது 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 4-ம் நாளன்று மழை பெய்கிற நிலை இருந்ததால் தனது 2-வது இன்னிங்ஸை விரைவாகவே முடித்துக்கொண்டது.
3-வது டெஸ்டில் வெற்றி பெற மே.இ. தீவுகள் அணிக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 3-ம் நாளின் முடிவில் 6 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட்டுகளை இழந்து 10 ரன்கள் எடுத்தது. எதிர்பார்த்தது போலவே 4-ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் கடைசி நாளில் மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது இங்கிலாந்து அணி.
இந்நிலையில் கடைசி நாளில் 37.1 ஓவர்களில் 129 ரன்களுக்குச் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இதனால் 3-வது டெஸ்டை 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியது. 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த பிராட், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். பிராடும் சேஸும் அவரவர் அணியின் தொடர் நாயகர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.