தோனியின் சாதனை காலி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து தலைவன் தோனியின் சாதனையை காலி செய்துள்ளனர்.. என்ன சாதனை தெரியுமா..?

தோனியின் சாதனை காலி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஜோடி சேர்ந்து தலைவன் தோனியின் சாதனையை காலி செய்துள்ளனர்.. என்ன சாதனை தெரியுமா..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முறியடித்துள்ளனர்.

2021-2023 சர்வதேச டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் அசத்துவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து மூன்று விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்து முதல் நாளை வெற்றி கரமாக கடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 146* ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

தோனியின் சாதனையை கடந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி..

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய இருவரும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் தோனியின் மிகப்பெரிய சாதனையை காலி செய்துள்ளனர்.

ஐசிசி தொடரில் இறுதிப் போட்டியில் அதிக முறை விளையாடிய இந்திய வீரர்கள் என்ற வரிசையில் தோனியின்(5) சாதனையை விராட் கோலி(6) மற்றும் ரோஹித் சர்மா(6) முறியடித்துள்ளனர்.

 

தோனி இதுவரை 2007டி.20 உலகக் கோப்பை,2011ஒருநாள் உலகக் கோப்பை,2013சாம்பியன்ஸ் டிராபி,2014டி.20 உலகக் கோப்பை, மற்றும்2017 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி உள்ளார் இதில் முதல் மூன்று தொடர்களில் வெற்றியைப் பெற்று கடைசி இரண்டு தொடர்களில் தோனி தோல்வி அடைந்துள்ளார்.

ரோஹித் சர்மா இதுவரை.,2007டி.20 உலகக் கோப்பை,2013சாம்பியன்ஸ் டிராபி,2014டி.20 உலகக் கோப்பை, மற்றும்2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021,2023 உலக டெஸ்ட் சாம்பியன் டிராபியில் விளையாடி 6 ஐசிசி பைனலில் விலையாடியுள்ளார்..

விராட் கோலி இதுவரை., 2011 உலகக் கோப்பை,2013சாம்பியன்ஸ் டிராபி,2014டி.20 உலகக் கோப்பை, மற்றும்2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021,2023 உலக டெஸ்ட் சாம்பியன் டிராபியில் விளையாடியுள்ளார்.

Mohamed Ashique:

This website uses cookies.