சும்மா சொல்ல கூடாது தரமான செய்க தான்… சதம் அடித்து வரலாறு படைத்த டர்வீஸ் ஹெட்; பாராட்டும் கிரிக்கெட் உலகம் !!

சும்மா சொல்ல கூடாது தரமான செய்க தான்… சதம் அடித்து வரலாறு படைத்த டர்வீஸ் ஹெட்; பாராட்டும் கிரிக்கெட் உலகம்

இந்திய அணியுடனான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ள ஆஸ்திரேலிய அணியின் டர்வீஸ் ஹெட்டிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பந்துவீச்சாளர்களாக உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என இந்திய அணி தீர்மானித்துள்ளதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திர அஸ்வினுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா மட்டுமே அணியில் இடம்பெற்றுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் ஒரு துவக்க வீரரான உஸ்மான் கவாஜா டக் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான டேவிட் வார்னர் 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய லபுசேன் 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் – டர்வீஸ் ஹெட் ஜோடி, இந்திய அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்டு தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்து வருகிறது. ஸ்டீவ் ஸ்மித் பொறுமையாக விளையாடினாலும், மறுமுனையில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை போன்று விளையாடி வரும் டர்வீஸ் ஹெட் 106 பந்துகளில் சதமும் அடித்து அசத்தினார். வெளிநாடுகளில் டர்வீஸ் ஹெட்டிற்கு இது முதல் சதமாகும். வெளிநாடுகளில் தனது முதல் சதத்தையே இந்திய அணிக்கு எதிராக, அதுவும் இறுதி போட்டியில் அடித்து பல்வேறு வரலாறுகளிலும் இடம்பிடித்த டர்வீஸ் ஹெட்டிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் டர்வீஸ் ஹெட்டை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அதில் சில;

 

 

Mohamed:

This website uses cookies.