ஐசிசி’யின் செயல் அதிகாரி பொறுப்பில் ஒருந்து டேவிட் ரிச்சரட்சன் விலகல்!!
தற்போது சர்வதேச கிரிக்கெட்டி கவுன்சிலின் செயல் அதிகாரியாக இருக்கும் தென்னாப்பிரிக்ஜாவை சேர்ந்த டேவிட் ரிச்சட்சன் விலக உள்ளார். அடுத்த உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் தனது பதவியில் இருந்து விலகுவார் என தெரிகிறது.
இவர் தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவர். டேவிட் ரிச்சரட்சன் கடந்த 2002ல் இருந்து ஐசிசி மிர்வாக வேளையில் இருக்கிறார். 2002ஆம் ஆண்டு ஐசிசியின் போது நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டர்.
அந்த பதவிக்கு வந்த முதல் நபர் இவர்தான். பின்னர் 2012ஆம் ஆண்டு செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு தற்போது வரை அந்த பதவியில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது அடுத்த உலகக்கோப்பை தொடருடன் தனது 7 வருட செயல் அதிகாரி பணியை ராஜினாமா செய்து செல்ல உள்ளார். இது குறித்து டேவிட் ரிச்சரட்சன் கூறியதாவது,
இந்த தருணத்தை நான் எப்போதும் மறக்க மாட்டேன். கடந்த 7 வருடங்கள் ரன்னுக்கு அற்புதமாக அமைந்தது. அடுத்த 12 மாதங்கள் கடினமாக இருக்கப்போகிறது. இந்த 12 மாதத்தில் உலகின் கிரிக்கெட் திட்டங்கள் மற்றும் கிரிக்கெட் வியாபார நுணுக்கங்களுக்கான இறுதி வடிவத்தை தயாரித்து முடிக்க வேண்டும். இந்த பணியில் இருந்து விடை பெரும் போது நிமதியாகி செல்வேன்.
என கூறினார் டேவிட் ரிச்சரட்சன்.