புஜாராவிற்கு பந்து வீச.. கடவுளை வேண்டி இருப்பேன்: ப்ரெட் லீ

நல்ல வேளை நான் சட்டேஸ்வர் புஜாராவிற்கு பந்து வீசவில்லை அவருக்கு பந்துவீச எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நான் கடவுளை வேண்டிக் கொண்டே பந்துவீசி இருப்பேன் என ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

நான் அவருக்கு பந்துவீச வேண்டுமானால் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன். கண்டிப்பாக அவரது விக்கெட்டிற்கு அதிக விலை வைத்துள்ளார். இயற்கையின் ஒரு கொடும் தயாரிப்பு அவர். அவருடைய ஆட்டத்திறனை பாருங்கள் மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார். என்று கூறியுள்ளார் பிரெட் லீ

71 ஆண்டுக்கால காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆஸி. மண்ணில் முதல் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்துள்ளது. சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டு டிராவில் முடிவடைந்தது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களாக நடடைபெற்று வரும் டெஸ்ட், டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்று ஆடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

பின்னர் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த டிசம்பர் அடிலெய்டில் தொடங்கியது. அதில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பின்னர் பெர்த்தில் நடைபெற்ற டெஸ்டில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்ன் டெஸ்டில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. இதனால் 2-1 என தொடரில் முன்னிலை பெற்றது.
கடைசி டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் கடந்த 3-ஆம் தொடங்கியது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 622-7 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 2-ஆம் நாள் ஆட்டத்தின் மாலை வேளை மழை,மோசமான வானிலையால் கைவிடப்பட்டது.
ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், பாலோ ஆனை தொடர்ந்தது. விக்கெட் இழப்பின்றி 6 ரன்களை எடுத்த நிலையில் நான்காம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.

316 ரன்கள் எடுத்தால் டிரா செய்யலாம் என்ற நிலையில் 5-ஆம் நாளான திங்கள்கிழமையும் மோசமான பருவநிலையால் ஆட்டம் நடைபெறவில்லை. நடுவர்கள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் டிராவில் முடிவடைந்தது சிட்னி டெஸ்ட். இதன் மூலம் தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி.
இந்தியாவின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த ஆஸி. அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சொந்த மண்ணில் முதன்முறையாக 30 ஆண்டுகளுக்கு பின் பாலோ ஆனை தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆட்ட மற்றும் தொடர் நாயகன் புஜாரா
ஆஸி. டெஸ்ட் தொடரில் இந்தியா கைப்பற்ற பிரதான காரணமாக இருந்த சேதேஸ்வ் புஜாரா தொடர் மற்றும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இத்தொடரில் அவ் 3 சதங்களை விளாசினார். மேலும் ஒட்டுமொத்தமாக 521 ரன்களை குவித்தார் அவர்.

Sathish Kumar:

This website uses cookies.