தலைவன் ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும்… நாம வேற எதுவும் யோசிக்கவே தேவை இல்ல; தீபக் சாஹர் அதிரடி பேச்சு !!

தோனி உன் மீது நம்பிக்கை வைத்தால் நீ உன்னை முழுவதுமாக நம்ப வேண்டும் என்று தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் சஹர், தன்னுடைய அபாரமான பந்துவீச்சின் மூலம் சென்னை அணிந்த வருடம் டைட்டில் வட்டத்தை வெல்வதற்கு மிகப்பெரும் உதவியாக இருந்தார்.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணிக்கு அறிமுகமான தீபக் சஹர் டி20 தொடர்கான முக்கிய வீரராக கருதப்படுகிறார்.

அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சஹர் சென்னையின் அசைக்க முடியாத வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார். குறிப்பாக 2021ல் இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு உலக கிரிக்கெட் வட்டாரத்தில் அனைவரது பாராட்டையும் பெற்ற தீபக் சஹர் காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் பங்கு பெற முடியாமல் போனது.

தற்பொழுது முழுமையான ஓய்வில் ஈடுபட்டிருக்கும் தீபக் சஹர் தன்னுடைய கிரிக்கெட் கரியர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரியப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய சிறப்பான செயல்பட்டிர்க்கு முக்கிய காரணம் தோனி என் மீது வைத்த அதீத நம்பிக்கைதான் என்று தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தீபக் சஹர் தெரிவித்ததாவது,“தோனி எனக்கு நிறைய அறிவுரைகளை கொடுப்பார். அதில் மிகச் சிறந்த அறிவுரை என்னவென்றால் முதலில் நீ உன்னை நம்ப வேண்டும் என்பதுதான், முதன் முதலில் நான் சென்னை அணிக்காக விளையாடிய போது தோனி என் மீது வைத்த நம்பிக்கை தான் என்னுடைய பந்துவீச்சில் தெரிந்தது, தோனி தான் தலைசிறந்த நம்பர் ஒன் கேப்டன், தோனி உன் மீது நம்பிக்கை வைத்து விட்டால் நீ உன்னை நம்ப வேண்டும், அந்த நம்பிக்கை தான் நான் சென்னை அணையில் சிறப்பாக செயல்பட்டதற்கான முக்கிய காரணம், அந்த ஒரு தருணம் தான் என்னுடைய ஒட்டுமொத்த கரியரையே மாற்றியது, தோனி என் மீது வைத்த நம்பிக்கையும் என்னுடைய தன்னம்பிக்கையும் உண்மையில் சிறப்பானது என்று தீபக் சஹர் தெரிவித்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.