தோனி மனது வைத்தால் தான் எல்லாமே நடக்கும்; உண்மையை உடைத்த முன்னாள் சென்னை வீரர் !!

தோனி ஒரு வீரர் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்குவார் என முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே வின் நிரந்தர கேப்டன் என்று ரசிகர்களால் நம்பப்படும் நம்ம தல தோனி அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளிலும் பல சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுத் தந்தவர், இவர் எந்தவிதமான நெருக்கடியான நேரமாக இருந்தாலும் தெளிவான முடிவு எடுப்பதில் வல்லவர்,  இந்திய அணியினரிடையே தோனியின் செல்லப் பெயர் ‘மிஸ்டர் கூல்’. ஆட்டத்தின் போக்கு எப்போதுமே தோனியை பெரிதாக பாதித்ததில்லை.

தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தோனியுடனான தங்களது அனுபவங்களை முன்னாள் வீரர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான பத்ரினாத் தோனியின் கேப்டன்சி குறித்து கூறியதாவது.

தல தோனி என்று நம்பி விட்டாள் அவருக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கி கொண்டே இருப்பார் அவர் சிறப்பாக செயல்படாத போதிலும் சரியே, எனது வேலை மிடில் ஆர்டரில் விளையாடுவது, தோனியின் பலம் என்னவெனில் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிப்பார். பத்ரி நன்றாக ஆடுகிறார் என்று தோனி நினைத்தாரானால் பத்ரி இருப்பார், ‘நான் வாய்ப்புகள் வழங்குவேன், அவர் நிரூபிக்கட்டும்’என்பார்.

தோனி நான் மிடில் ஆர்டரில் விளையாடும்போது அவர் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு பல அறிவுரைகள் கொடுப்பார். தோனி ஒருவரை நம்பாவிட்டால் அவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதான செயலாகும்.. இதுவே நம்ம தல தோனி இன் சீக்ரெட் ஆகும். தல  தோனியின் நம்பிக்கையை  பெறுவதற்காகவே  பெரிதும் பாடுபட வேண்டியிருக்கும் என்ற எண்ணம் நமக்குத்  தோன்றுகிறது. தோனியின் கேப்டன்ஷிப்் பார்த்து பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் வியந்து கொண்டுள்ளார்கள்”என்றார்.

Mohamed:

This website uses cookies.