14 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதியை விளாசிய ரவிசாஸ்திரி!
14 நாட்கள் தனிமைப்படுத்தல் மட்டும் இல்லை என்றால் விராட் கோலி கடைசி டெஸ்ட் போட்டிக்கு வந்திருப்பார் என்று தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியாளர்கள் என அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டனர். அங்கே சிட்னி நகருக்கு வெளியே அனைவரும் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
14 நாட்கள் தனிமைப்பட்ட பின்னர் இந்திய வீரர்கள் அனைவரும் சிட்னி மைதானத்திற்குள் அழைத்து வரப்படுவார்கள். நவம்பர் 27ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது அதன் பின்னர் டிசம்பர் 4ஆம் தேதி டீ20 வரும் டிசம்பர் 17-ம் தேதி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்காக இரண்டு அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
முன்னதாக ஆறு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி தனிமைப் படுத்துதலை வைத்துக் கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டிருந்தார். ஆனால், அதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செவிசாய்க்கவில்லை. தற்போது விராட் கோலியை முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த உடன் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விடுவார்.
இந்த நாட்கள் குறைக்கப்பட்டு இருந்தால், மேலும் ஒரு சில போட்டிகளில் கோலியால் ஆட முடிந்திருக்கும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்திருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி அவர் கூறுகையில்…
விராட் கோலியின் வாழ்க்கையில் முதன்முதலாக இது நடக்கப்போகிறது இதன் காரணமாக நான் அவருடன் தான் இருப்பேன். ஒரு போட்டியை கூட விட்டு விடக் கூடாது என்று எண்ணக்கூடிய நபர் அவர்.. அப்படி இருக்கும்போது வர் 3 போட்டிகளை விட்டு விட்டு செல்கிறார் என்றால் அது அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்கிறது. ஆனால் 14 நாட்கள் என்ற விதி இல்லை என்றால் கண்டிப்பாக விராட் கோலி கடைசி போட்டியில் இந்திய அணியுடன் இணைந்து கொண்டார் என்று தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி.