மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்… ரோகித் சர்மா முழு சீசனும் ஆடமாட்டாராம் – காரணத்தை சொன்ன மும்பை இந்தியன்ஸ் கோச் மார்க் பவுச்சர்!

ரோகித் சர்மாவை முழு சீசனும் ஆடவைக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. அவரது உடல்நிலை எங்களுக்கும் முக்கியம் என்பதால் ஒரு சில போட்டிகளில் வெளியில் அமரவைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம் என பேட்டி அளித்துள்ளார் மார்க் பவுச்சர்.

இந்த வருடம் ஐபிஎல் தொடரில் முன்னணி இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்து பங்கேற்காமல் இருக்கின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, தீபக் சஹர், புவனேஸ்வர் குமார் ஆகியோர் முக்கியமான வீரர்களாக இருக்கின்றனர்.

50-ஓவர் உலகக்கோப்பை இந்த வருடம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கவிருக்கிறது. அதற்குள் வீரர்கள் முழு தகுதியுடன் இருக்க வேண்டும். நன்றாக இருக்கும் வீரர்கள் காயமடைந்து விடக்கூடாது என்பதால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் முன்னணி இந்திய வீரர்களின் பணிச்சுமை மீது பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.

பணிச்சுமையை குறைக்க, சூழ்நிலைக்கேற்ப சில போட்டிகளில் முன்னி இந்திய வீரர்களுக்கு ஓய்வுகளும் கொடுக்க வேண்டும் என்று ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ வலியுறுத்தி இருக்கிறது. ரோகித் சர்மாவும் சமீப காலமாக அடிக்கடி காயம் அடைந்து வருகிறார். அவர் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த வருட ஐபிஎல் தொடர் வருகிற 31ஆம் தேதி துவங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி, ஏப்ரல் 2ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுகிறது. இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வீரர்கள், மும்பை வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட மும்பை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இருவரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில் ரோகித் சர்மா பணிச்சுமை குறித்து மார்க் பவுச்சரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய மார்க் பவுச்சர்,

“ரோகித் சர்மா உடல் நிலையில் நாங்கள் முழு கவனத்துடன் இருக்கிறோம். பணிச்சுமையை நன்றாக கண்காணித்து வருகிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு கொடுக்கவுள்ளோம். விளையாடும் போட்டிகளில் அவர் முழுமையான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுக் கொடுத்தால் போதுமானது. அணி நிர்வாகம் வேறு எதையும் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

இந்திய அணிக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்று தெரியும். ஆகையால் அவரது உடல் நிலையில் நாங்கள கூடுதல் கவனத்துடன் இருக்கிறோம். அவ்வபோது பிசிசிஐக்கு அப்டேட் கொடுக்கப்படும்.” என்று தெளிவுபடுத்தினார்.

Mohamed:

This website uses cookies.