உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சமனில் முடிவடைந்தால் வெற்றி யாருக்கு அறிவிக்கப்படும் தெரியுமா?
வருகிற ஜூன் 18-ம் தேதி தொடங்கப்பட்டு ஜூன் 23ஆம் தேதி வரை இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டி நடக்க இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
மறுமுனையில் அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடப்பதற்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. தற்பொழுது அனைத்து ரசிகர்களும் ஒரு கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவேளை உலகச் சாம்பியன்ஷிப் போட்டி சமனில் முடிவடைந்தால் வெற்றி யாருக்கு அறிவிக்கப்படும் என்பதுதான் அந்த கேள்வி.
கூடியவரையில் போட்டி விதிமுறையை ஐசிசி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் கூட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டி சமனில் முடிவடைந்தது. மேலும் ஆர் காலத்தில் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் சமணில் முடிவடைந்தது.எனவே முன்பே ஐசிசி கூறியிருந்த விதிமுறைப்படி, எந்த அணி அதிக பவுண்டரிகளை அடித்து இருந்ததோ அந்த அணி சாம்பியன் என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியன் அணியாக கோப்பையை கைப்பற்றியது.
அதே போல நடக்க இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும், ஐசிசி ஒருசில விதிமுறையை கூடிய விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை போட்டி இறுதியில் சமனில் முடிவடைந்தால், ஐசிசி கூர இருக்கின்ற அந்த விதி முறைப்படி வெற்றி பெற்ற அணியை தீர்மானிக்க முடியும்.
எனவே இதுபற்றி ஐசிசி கூடிய விரைவில் தன்னுடைய அறிவிப்பை வெளியிடும் என்று அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களும்,கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.