சௌராஷ்ட்ரா அணியிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல தகுதியான ஒரே வீரர் இந்த இளம் வீரர்தான் ; சௌராஷ்ட்ரா அணியின் கேப்டன் உநாத்கத் சொல்கிறார்..
சௌராஷ்ட்ரா அணியிலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல தகுதியான ஒரே வீரர் சி.ஜானி தான் என சௌராஷ்டிரா அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.
2022விஜய் ஹாசரே தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று சௌராஷ்டிரா மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற சௌராஷ்ட்ரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணி, சௌராஷ்டிரா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலிருந்து தடுமாறியது,இதனால் மகாராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 248/9 ரன்கள் அடித்திருந்தது, இதில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 108 ரன்கள் அடித்திருந்தார்.
இதன்பிறகு எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சௌராஷ்ட்ரா அணி மகாராஷ்ட்ரா அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது, சௌராஷ்டிரா அணியின் சார்பாக ஜாக்சன் 133 ரங்களும், தேசாய் 50 ரங்களும் எடுத்து அசத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இரண்டு முறை விஜய் ஹசாரை கொப்பையை வெற்றி பெற்றிருக்கும் சௌராஷ்டிரா அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக மகாராஷ்டிரா அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி 48 வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சௌராஷ்ட்ரா அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிரக் ஜானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சௌராஷ்டிரா அணியின் கேப்டன் மற்றும் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளருமான ஜெயந்த் உநாத்கத், சௌராஷ்ட்ரா அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிராக் ஜானிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று போஸ்ட் மேட்ச் பிரசண்டேஷனில் பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து உநாத்கத் பேசியதாவது,“சௌராஷ்ட்ராணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சி.ஜானி இந்த தொடரில் மிக சிறப்பாக விளையாடியுள்ளார். சௌராஷ்ட்ரா அணியிலிருந்து ஒரு வீரர் அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்றால் நிச்சயம் அதற்கு தகுதியானவர் ஜானி தான்” என்று உநாத்கத் பாராட்டி பேசியிருந்தார்.
சி.ஜானி., மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 10 ஓவர்கள் பந்துவீசி 43 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட் வீழ்த்தியிருந்தார், இதில் 41 டாட் பால்களும் வீசியிருந்ததார். அதேபோன்று பேட்டிங்கில் 25 பந்துகளுக்கு 30 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.