இவரு அஸ்வினை எடுக்காம பைனல் ஆடுவாரு…! இந்தியா தோத்தாலும் அதுக்கு பதில் சொல்ல மாட்டாரு..! அடுத்த டெஸ்டுக்கும் இவரே கேப்டன்னா.. என்ன நியாயமிது? – ரோகித் சர்மாவை சாடிய ஜாம்பவான்!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை இழந்துவிட்டு வரும், அஸ்வினை ஏன் பைனலில் எடுக்கவில்லை என பதில் சொல்லமாட்டார்கள் மற்றும் பல தவறுகளை செய்திருந்தாலும் அதை கேள்வி கேட்க எவருமே இல்லையெனில் என்ன கிரிக்கெட் நிர்வாகம் நடத்தப்படுகிறது? என்று கடுமையாக சாடியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணிக்குள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

ஏனெனில் பைனலில் டாஸ் வென்று முதலில் பவுலிங் எடுத்தது, அஸ்வின் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாதது மற்றும் ஆஸி., பிளேயர்கள் பலவீனம் தெரியாமல் பந்துவீசியது என பல தவறுகளை ரோகித் சர்மா தனது கேப்டன் பொறுப்பில் செய்தார் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

பல்வேறு முன்னாள் வீரர்கள், ஜாம்பவான்கள் மற்றும் விமர்சனங்கள் பலர் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு மீது கேள்வி எழுப்பினர். ஆனால் கேள்வி எழுப்பவேண்டிய பிசிசிஐ எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை? நேரடியாக அடுத்து வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு  ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை கடுமையாக சாடியுள்ள ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு மீது தனது கருத்தை முன் வைத்திருக்கிறார்.

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிந்தபின் அணியினர் மத்தியில் மீட்டிங் நடத்தப்பட்டதா? கேப்டன் நியமனம் குறித்து பேசப்பட்டதா? எதுவும் நடக்கவில்லை. எங்களது காலத்தில் கேப்டனை ஒவ்வொரு தொடரிலும் நியமிக்கும் முன்பு தேர்வுகுழுவினர் இருப்பர். அங்கு முடிவு செய்யப்படும். அதன் பிறகு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டவர் தேர்வுக்குழுவில் உள்ளவர்களிடம் அணியில் தங்களுக்கு என்ன வேண்டும்? எப்படிப்பட்ட வீரர்கள் தேவை? என்பதை கேட்பர்.

ஆனால் இப்போது இருக்கும் இந்திய அணியில் அது போன்று எதுவும் நடைபெறுவதில்லை. ஒருமுறை கேப்டனாக நியமிக்கப்பட்டுவிட்டால், அடுத்தடுத்த தொடர்களில் தோல்வியை தழுவினாலும் அதற்கென்று எந்தவித மீட்டிங் வைக்காமல், அவர்கள் தனிப்பட்ட செயல்பாடு சரியாக இருக்கிறதா? இல்லையா? என்பதை பற்றியும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து பொறுப்பில் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் முதல் பௌலிங் எடுத்தது ஏன்? அஸ்வின் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாதது ஏன்? டிராவிஸ் ஹெட்-க்கு பவுன்ஸ் பலவீனம் என்பதால் அதை ஏன் பயன்படுத்தவில்லை? ஒருவேளை அவருக்கு பவுன்ஸ் பலவீனம் என்பதே தெரியவில்லையா? என பல்வேறு கேள்விகளை கேட்டு கேப்டன்களை தொலைத்திருக்க வேண்டும். அது போன்று ஏன் நடக்கவில்லை?.

தனக்கு மேல் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் பதில் கூற வேண்டும் என்கிற எந்தவித பயமும் கேப்டனிடம் இல்லை. தனிக்காட்டு ராஜா போல செயல்படுகிறார்கள். இதை எப்படி பார்த்துக்கொண்டு இருக்க முடியும்? என்று பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

Mohamed:

This website uses cookies.