விளையாட விருப்பமில்லை என்றால் எழுதிகுடுத்துட்டு கெலம்பிரு..டெல்லி அணியின் நட்சத்திர வீரரை விமர்சித்த சேவாக்…
விளையாட விருப்பமில்லை என்றால் தாராளமாக வெளியேறுங்கள் டேவிட் வார்னருக்கு எச்சரிக்கை விடுத்த விரேந்தர் சேவாக்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணி அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் அகல பாதாளத்தில் உள்ளது.
2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதால் டேவிட் வார்னரை கேப்டனாக்கிய டெல்லி அணி, இந்த வருடம் மிக சிறப்பாக செயல்படும் என எதிர்பார்த்த நிலையில் இப்படி மோசமாக விளையாடி வருவது முன்னாள் வீரர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கடைசியாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல் அணி விளையாடிய விதம் அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இஷ்டம் இருந்தால் விளையாடுங்கள் அல்லது ஐபிஎல் தொடரை விட்டு விளகுங்கள்…
குறிப்பாக t20 தொடரை ஒரு நாள் தொடர் போல் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மீது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது, இவர் அணியை வெற்றி பெறுவதற்காக விளையாடுகிறாரா..? அல்லது தன்னுடைய பார்மை மீட்டெடுப்பதற்காக இப்படி மந்தமாக விளையாடுகிறாரா..? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் அணியை வெற்றி பெறுவதற்காக விளையாடுவதாக இருந்தால் விளையாடுங்கள் அல்லது ஐபிஎல் தொடரிலிருந்து சென்று விடுங்கள் என்று டேவிட் வார்னரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
டேவிட் வார்னர் குறித்து சேவாக்க பேசுகையில்.,“வார்னர் குறித்த விமர்சனத்தை நான் ஆங்கிலத்தில் கூற வேண்டும் என விரும்புகிறேன், இதை கேட்டால் நிச்சயம் வார்னர் வருத்தப்படுவார் ஆனால் இதை கேட்பதால் அவர் நன்றாக விளையாடுவார் என நம்புகிறேன்.ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 50 ரன்களை 25 பந்துகளில் எளிதாக அடித்து விடலாம் இதை அந்த அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வாலிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் அவர் 25 பந்துகளில் சதம் அடித்தார் அவரால் செய்ய முடிந்தால் உங்களால் ஏன் செய்ய முடியாது, டேவிட் வார்னர் 30 ரன்கள் தன்னுடைய விக்கெட்டை இழந்திருந்தால் எந்த ஒரு விமர்சனமும் எழுந்திருக்காது.
ஆனால் 55 பந்துகள் எதிர்கொண்ட டேவிட் வார்னர் வெறும் 60 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவருக்கு பின் களமிறங்கும் அதிரடி வீரர்களான ரோமன் பவல் மற்றும் இஷான் பொரெல் போதுமான பந்துகள் விளையாடுவதற்கு கிடைக்கவில்லை.டேவிட் வார்னர் அதிவேகமாக ரன்களை அடிக்க முடிந்தால் அடியுங்கள் அல்லது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுங்கள் என்று டேவிட் வார்னரை” சேவாக் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.