பாக்குறதுக்கு தான் ஆளு அமைதியா இருப்பாரு… ஆஸ்திரேலிய வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை பார்த்து பயந்ததற்கான காரணத்தை வெளியிட்ட பிரட் லீ !!

முக்கியமான போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரை ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங் செய்தது கிடையாது என்று பிரட்லி மனம் திறந்து பேசியுள்ளார்.

தான் விளையாடிய காலத்தில் ஒட்டுமொத்த எதிரணிக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சதத்தில் சதம் அடித்து அசத்தி எந்த ஒரு வீரமும் செய்யாத மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ள சச்சின் டெண்டுல்கரை புகழாத வீரர்களை கிடையாது என்று கூறலாம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் பிரெட் லீ, சச்சின் டெண்டுல்கர் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியாக கொடுத்துள்ளார்.

அதில் பிரட் லீ தெரிவித்ததாவது, “ஸ்லஜிங்கிற்கு பெயர் போன நாங்கள் முக்கியமான போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்ய வந்தால் அவரிடம் எந்த ஒரு பேச்சும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று எங்களுக்குள் பேசிக் கொள்வோம், ஒருவேளை அவரை நாம் வம்புக்கு இழுத்தோம்(ஸ்லெட்ஜிங்) என்றால் அவருடைய விக்கெட்டை வீழ்த்துவது என்பது கடினமாகிவிடும், சச்சின் டெண்டுல்கர் மைதானத்திற்கு வெளியில் சாந்தமாகவும் மைதானத்திற்குள் ரண்களை குவிக்க வேண்டும் என்ற வெறியில் இருப்பார். நாம் பந்து வீசும் போது அவருடைய கண்களை பார்த்தால் புலியின் கண்களைப் போன்று காட்சியளிக்கும் அவர் பேட்டிங்கில் நம்முடன் சண்டை செய்வது போன்று தோன்றுவார்” என்று பிரட்லீ தெரிவித்திருந்தார்.

 

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 3630 ரன்கள் அடித்துள்ளார்.அதில் 11சதங்களும் 16 அரை சதமும் அடங்கும். அதேபோன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 71 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3077 ரன்கள் அடித்துள்ளார்.அதில் 9சதங்களும் 15 அரை சதங்களும் அடங்கும்.

Mohamed:

This website uses cookies.