இந்திய அணியில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என அனைத்து விதத்திலும் சர்வசாதாரணமாக விளையாடுவார். அவருக்கு இந்திய அளவில் மிக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் சமீபத்தில் ரவீந்திர ஜடேஜா போல இனி இளம் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது சமூக வலைதளங்களில் அதிக அளவில் பேசப்படுகிறது.
அவர் ஒரு சூப்பர் ஸ்டார்
கெவின் பீட்டர்சன் ரவீந்திர ஜடேஜாவை ஒரு சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் அவர் ஒரு சிறந்த பவுலர் அதுமட்டுமின்றி அவர் ஒரு சிறந்த ஃபில்டர். அனைத்து விதத்திலும் அவர் மிக அற்புதமாக ஸ்கோர் செய்வார்.
ஒரு கம்ப்லீட் கிரிக்கெட் விளையாட்டு வீரர் யார் என்று கேட்டால் தற்பொழுது ரவீந்திர ஜடேஜா என்றுதான் நான் கூறுவேன் என்று கூறியுள்ளார். எனவே இனிவரும் இளம் வீரர்கள் அதேசமயம் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரவீந்திர ஜடேஜா போல விளையாட வேண்டும். அவரை பின்பற்றினாலே அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற முடியும் என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா
ஐசிசி தரவரிசை புள்ளி பட்டியலில் ஒரு பேட்ஸ்மேனாக டெஸ்ட் போட்டிகளில் 42 வது இடத்திலும் ஒருநாள் போட்டிகளில் 89 இடத்திலும் உள்ளார்.
ஒரு பந்து வீச்சாளராக டெஸ்ட் போட்டிகளில் 16வது வீரராகவும் ஒருநாள் போட்டிகளில் 29வது வீரராகவும் இருக்கிறார்.
அதேசமயம் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக டெஸ்ட் போட்டிகளில் 3வது இடத்திலும் ஒருநாள் போட்டிகளில் 9வது இடத்திலும் உள்ளார்.
தற்பொழுது ரவீந்திர ஜடேஜா இந்திய வீரர்களுடன் இணைந்து இங்கிலாந்துக்குச் சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.