அடுத்த தலைமுறை விராத் கோலிக்கு அணியில் இடமில்லை!! ட்விட்டரில் கடுப்பான ரசிகர்கள்!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இவரை ஏன் எடுக்கவில்லை என ட்விட்டரில் ரசிகர்கள் கடுமையாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

உலக கோப்பையை அடுத்து இந்திய அணி ஆடவிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய தொடர்களுக்கான வீரர்களை தனித்தனியே இன்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் வெளியிட்டு இருந்தது.

தாமாக முன்வந்து இனி இரண்டு மாதத்திற்கு ராணுவத்தில் பணிபுரிய ஆசைப்படுகிறேன் என தோனி கூறியதால், அவரை அணியில் எடுக்கவில்லை. பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் முதன்மை கீப்பராக ஒருநாள் போட்டிக்கும், விருத்திமான் சஹா டெஸ்ட் போட்டிக்கு முதன்மை கீப்பராகவும் செயல்படுவர்.

அதேநேரம் விராட் கோலிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், அவர் தனக்கு ஓய்வு வேண்டாம் பணியில் தொடர விரும்புகிறேன் என தெரிவித்ததால், அவர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் புதிதாக நவ்தீப் சைனி, ராகுல் சஹார், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இளம் வீரர்களுக்கும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணியில் ஆடி வரும் இளம் வீரர் சுப்மன் கில் மூன்று ஒருநாள் போட்டிகளில் 149 ரன்கள் அடித்து சராசரியாக 50 ரன்களை கொண்டுள்ளார். இந்திய அணியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு டி20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிசிசிஐ தேர்வுக் குழுவிற்கு கடுமையாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவற்றில் சில ட்விட்டர் பதிவுகளை இங்கு காண்போம்

 

Prabhu Soundar:

This website uses cookies.