நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கேன்… வாய்ப்பு மட்டும் கொடுங்க போதும்; அதிரடியாக அறிவித்த ரிங்கு சிங் !!

நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கேன்… வாய்ப்பு மட்டும் கொடுங்க போதும்; அதிரடியாக அறிவித்த ரிங்கு சிங்

அடுத்த ஆண்டு நடைபெறும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட தயாராக இருப்பதாக அதிரடி நாயகனான ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், கடைசி நேரத்தில் 6 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணிக்கு நம்ப முடியாத ஒரு வெற்றியை பெற்று கொடுத்ததன் மூலம், கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த ரிங்கு சிங், கொல்கத்தா அணிக்காக தொடர்ச்சியாக பல வெற்றிகளை பெற்று கொடுத்ததன் மூலம், இந்திய டி.20 அணியிலும் இடம்பிடித்தார்.

ஐபிஎல் தொடர், மற்ற உள்ளூர் தொடர்கள் மற்றும் சர்வதேச போட்டிகள் என தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மிக சரியாக பயன்படுத்தி வரும் ரிங்கு சிங், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் வெற்றி 1 பந்தில் 1 ரன் தேவை என்ற நிலையில், சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.

சமகால கிரிக்கெட்டின் சிறந்த பின்சர்களில் ஒருவராக உருவெடுத்து வரும் ரிங்கு சிங்கை முன்னாள் வீரர்கள் பலர் தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டி பேசி வரும் நிலையில், அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பையில் விளையாட தான் தயாராக இருப்பதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரிங்கு சிங் பேசுகையில், “2024ம் ஆண்டு டி.20 உலகக்கோப்பையில் விளையாட நான் தயாராகவே உள்ளேன். நான் எதிர்காலத்தை பற்றி பெரிதாக யோசிப்பவன் இல்லை. உலகக்கோப்பைக்கான இந்திய எனக்கு இடம் கிடைத்தால் அதை நான் நிச்சயமாக மிக சரியாக பயன்படுத்தி கொள்வேன். டி.20 போட்டியில் மட்டும் இல்லை, எவ்விதமான பார்மட்டில் எனக்கு கிடைத்தாலும் நான் எனது 100 சதவீத பங்களிப்பை கொடுப்பேன். இந்திய அணிக்கு விலையாட எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பே மிகப்பெரியது. எங்கள் ஊரில் இருந்து இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒரே ஒரு ஆள் நான் மட்டும் தான். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு அனைவருக்கும் இருக்கும், குறிப்பாக உலகக்கோப்பையில் நமது நாட்டிற்காக ஒரு முறையாவது விளையாட வேண்டும் என்ற கனவு அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் இருக்கும், அந்த கனவு எனக்கும் உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எனது பெயர் இடம்பெற்றுவிட்டால் அந்த மகிழ்ச்சியை நான் வெளிப்படுத்துவேன் என்பது கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த ஒரு நாளிற்காக நான் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளேன். அந்த கனவை அடைய தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து கொண்டே இருப்பேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.