விராட் கோலியை சந்திக்க மிக ஆர்வமாக உள்ளேன் குஜராத்தைச் சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் அர்சன் நக்வாஸ்வல்லா!

விராட் கோலியை சந்திக்க மிக ஆர்வமாக உள்ளேன் குஜராத்தைச் சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் அர்சன் நக்வாஸ்வல்லா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தம்ப்டனில் ஜூன் 18 தொடங்கி ஜூன் 23 வரை நடக்க இருக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல் நேற்று பிசிசிஐ வெளியிட்டது. இந்த பட்டியலில் அனைவரும் வியந்து பார்த்த ஒரு வீரர் அர்சன் நக்வாஸ்வல்லா தான். ஸ்டேண்ட் பை வீரர்களாக 4 வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒரு வீரராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த இந்த வீரர் பஸ்ட் கிளாஸ் போட்டியில் மிக சிறப்பாக பந்து வீச கூடிய வீரர். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது தனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள சூழல் எனக்கு தகுந்தவாறு இருக்கும்

இந்திய வீரர்களுடன் இந்த மாத இறுதியில் இங்கிலாந்து செல்ல இருக்கும் அர்சன் நக்வாஸ்வல்லா, ரோஹித் மற்றும் ஜாகிர் கான் உடன் அதிகமாக பேசி இருக்கிறேன். தற்பொழுது வரை நான் விராட் கோலியை சந்தித்தது கிடையாது. அவரை சந்தித்துப் பேச மிக ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் இங்கிலாந்திலுள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தகுந்தவாறு இருக்கும். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த சூழல் மிக கனகச்சிதமாகப் பொருந்தும். எனவே அங்கு சென்று நான் விளையாட உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

2011 உலகக்கோப்பை தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கம்

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வென்றவுடன் எனது மனதில் தோன்றிய எண்ணம் நானும் இதுபோல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே. அந்த தருணத்தில் தான் நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது என்னும் கண்டிப்பாக ஒருநாள் நிறைவேறும் என்று நம்பி இருக்கிறேன். தற்பொழுது இந்திய அணியின் ஸ்டாண்ட் பை வீரராக விளையாட இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இறுதியாக கூறி முடித்தார்.

இவர் குஜராத் அணிக்காக 16 பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார் அதில் மொத்தமாக இவர் 62 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் இவரது பௌலிங் அவரேஜ் 22.53 ஆகும். இவர் மொத்தமாக ஃபைவ் விக்கெட் ஹால் நான்கு முறையும், மேலும் ஒரு முறை டென் ஃபெர் விக்கெட்டையும் கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.